டவுன் பஸ்சில் பெண்களுக்கு இலவசம்... சவாரி குறைந்துவிட்டதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை

ஆட்டோ

அரசு நகர்ப்புற பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தால் 5 ஆயிரம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் 1236 அரசு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பாதிப்பு இலவச பேருந்து கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறிக்கையில் திமுக நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு ஆட்சி அமைந்தவுடன் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது. அதேபோல் திமுக ஆட்சி அமைந்தவுடன் நகரப் புறங்களில் செல்லும் பேருந்துகளில் மகளிருக்கு பயணச்சீட்டு வாங்காமல் இலவசமாக செல்லலாம் என்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள நகர்புற அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

    அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருப்பதால். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அரசு நடத்துனர்கள் ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பாட்ஷா திரைப்படத்தில் வரும் பாடல் ஆட்டோவில் பயணம் செய்ய பெண்களை கவரும் விதமாக இந்த ஆட்டோ தொழிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு பாடலை உருவாக்கப்பட்டு இருந்தது. சுமார் 20 ஆண்டு காலங்களுக்கு மேலாக இன்றுவரை ஆட்டோ தொழிலாளர்களை கௌரவித்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு என்று ஒரு அங்கீகாரத்தையும் இந்த பாடல் கொடுத்து இருந்தது.

    இந்த சூழ்நிலையில் மகளிருக்கு இலவச பஸ் கட்டண நடைமுறைக்கும் முன்பு வரை ஆட்டோக்களையும் ஷேர் ஆட்டோக்களையும் பெண்களே அதிகமாக பயணித்து வந்தனர்.

    ஆனால் இப்போது திண்டுக்கலில் மட்டும் 4711 ஆட்டோக்களும் சுமார் 200 ஷேர் ஆட்டோக்களும் இயங்கி வருகிறது. காலை நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் கல்லூரி பெண்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் ஆட்டோக்களிலும் சேர் ஆட்டோகளிலும் வாடகைக்கு செல்லும்பொழுது ஆட்டோவில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் என வாங்கிக்கொண்டு பயணிகளை ஏற்றி  கொண்டு இருந்தனர்.

    ஆட்டோவில் பயணம் செய்ய பத்து ரூபாய் என்பதால் அவர்களுக்கு பயணம் செய்ய பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்து பயணித்து வந்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் நாளொன்றுக்கு 700 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை சம்பாத்தித்து வந்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். ஆனால் தற்போது காலை 5 மணி அளவில் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து மணி கணக்கில் காத்துக் கிடந்தாலும் நாளொன்றுக்கு 150 ரூபாய் கிடைக்கும் அளவுக்கு இரண்டு வாடகைகள் மட்டும் கிடைக்கின்றது என்றும். தற்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் டீசலின் விலை 103 ரூபாய் கட்டணம் உயர்ந்துள்ளதால் எங்களால் ஆட்டோவில் பயணம் செய்பவர்களிடம் கூடுதலாக கூட காசு வாங்க முடியவில்லை என்றும் வேதனையாக தெரிவிக்கைன்றனர்.

    பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று அவர்களிடம் கூடுதலாக பணம் வாங்கினால் ஒன்று இரண்டு வாடகைகள் கூட எங்களுக்கு போதாமல் போய்விடுகிறது. இதனால் கட்டாத வாடகைக்கு ஆட்டோக்கள் ஓட்டக் கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு நகர் புற பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் முழுவது இலவசம் என்பதால் பெண்கள் அனைவரும் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து இலவசப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் படிக்க... இனி சாதாரண பட்டன் செல்போனில் பாடம் படிக்கலாம்...

    இதனால் திண்டுக்கல்லில் மட்டும் சுமார் 5000 ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு மகளிருக்கு நகர்புற பேருந்துகளில் இலவசம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஒரு தோராய கட்டணம் அவர்களிடம் வசூல் செய்யப்பட்டால் மட்டுமே எங்களுடைய வாழ்வாதாரம் நீடிக்கும். இல்லை என்றால் குதிரை வண்டி தொழில் ரிக்ஷா ஓட்டும் தொழில் அழிந்தது போல் இந்த ஆட்டோ ஓட்டுனர்களின் ஆட்டோ தொழில் நலிவடைந்து மாற்று வேலைக்கு செல்லக்கூடிய ஒரு அவல சூழ்நிலையை ஏற்படும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    இந்த மகளிர் நகர்புற அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்வது ஆட்டோ தொழிலாளர்கள் மட்டும் இன்றி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் நகர பேருந்துகள் திண்டுக்கல் தேனி மண்டலத்தில் 309 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பணியாற்றும் 309 பேருந்துகளில் 618 ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றுகின்றனர்.

    மேலும் படிக்க...திருக்குறள்களை தலைகீழாக எழுதி உலக சாதனை

    இந்த பேருந்துகளில் 2 ஷிப்ட் முறையில் பணியாற்றும் பொழுது 1236 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட்டின் வருவாயைப் பொறுத்து இவர்களுக்கு படிகாசு வழங்கபடும் அப்போது ஓட்டுனர் மட்டும் நடத்துனர்களுக்கு தலா சுமார் 150 ரூபாய் வரை பயண படி கிடைக்கும் ஆனால் தற்போது இலவசம் என்று அறிவித்ததால் 1500 முதல் 2000 ரூபாய் வரையே கலெக்ஷன் ஆவதால் பத்து ரூபாய் இருபது ரூபாய் பயணப்படி கிடைக்கிறது. இதனால் எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது என்று அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... தஞ்சாவூரில் மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக தலைவர் போக்சோவில் கைது...

    அரசு நகர்புற பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்பதால் திண்டுக்கல்லில் மட்டும் 5000 ஆட்டோ ஓட்டுனர்கள் 1236 நகர்புற பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச பயணம் என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யுமா இவர்களில் வாழ்வாதாரங்களை மீட்டு எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    திண்டுக்கல்: செய்தியாளர் இரா. சங்கர்
    Published by:Vaijayanthi S
    First published: