கொடைக்கானலில் ஊரடங்கை மீறி வெளியில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
கொடைக்கானலில் ஊரடங்கை மீறி வெளியில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
கொடைக்கானலில் போலீசார் சோதனை
வெளியே சுற்றித்திரிந்தவர்களிடம் காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களை ஒரு வேனில் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொடைக்கானலில் ஊரடங்கை மீறி வெளியில் தேவையில்லாமல் சுற்றியவர்களை காவல்துறையினர் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் சார்பில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் நாளுக்கு நாள் கொரனோ தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளான ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், பேருந்துநிலையம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், கோட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் போது அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிந்த 11 இளைஞர்கள் மற்றும் 5 பெண்களுக்கும் காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களை ஒரு வேனில் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அவர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் - ஜாபர்சாதிக்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.