Home /News /tamil-nadu /

கொடைக்கானலில் சாலையோர கடைகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்

கொடைக்கானலில் சாலையோர கடைகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்

கொடைக்கான‌ல்

கொடைக்கான‌ல்

Dindigul District : இந்த பணியில் வருவாய் துறையினர்,நெடுஞ்சாலை துறையினர்,நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

    கொடைக்கானலில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சாலையோர கடைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் துவங்கி உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளாமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போககுவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையில் சாலையோர கடைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு  மாவட்ட நிர்வாகத்திற்கு  உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து  மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி ஆக்கிரமிப்பாளர்களிடம் எச்சரிக்கை நோட்டீஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு  வழங்கப்பட்டது.



    இந்நிலையில் ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை ஜேசிபி வாகனம் கொண்டும்  தூய்மை பணியாளர்களை கொண்டும் முதற்கட்டமாக சாலையோராக கடைகள் தற்போது அகற்றப்பட்டு வருகிறது.

    ALSO READ |  தீப்பெட்டி பண்டல்கள் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு


     இந்த பணியில் வருவாய் துறையினர்,நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.




    இதனால் ஏரிச்சாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்படுகிறது. இதே போன்று மேல்மலை, கீழ்மலை கிராமங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றி வருவதாக கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    கொடைக்கான‌ல் செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Dindigul

    அடுத்த செய்தி