ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீண்ட நேரம் செல்போன் பேச்சு.. ஆத்திரத்தில் தங்கையை அடித்துக்கொன்ற அண்ணன்

நீண்ட நேரம் செல்போன் பேச்சு.. ஆத்திரத்தில் தங்கையை அடித்துக்கொன்ற அண்ணன்

சிறுமி கொலை

சிறுமி கொலை

செல்போனில் பேசியதற்காக 16 வயது சிறுமியை அவரது அண்ணனே கொலை செய்த சம்பவம் பழனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  செல்பேசியில் நீண்ட நேரம் பேசியதாக தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் பழனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரை சேர்ந்தவர் முருகேசன்.  இவருக்கு சங்கிலியம்மாள் என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும் இரண்டு மகள்களும்‌ உள்ளனர். முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில் மகன் கார்த்தி கட்டிடவேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.  முருகேசனின் இளைய மகளான 16 வயது சிறுமி  நேற்று இரவு படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரது குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில்  பரிதாபமாக உயிரிழந்தார்.

  Also Read:  கோடநாடு கொள்ளை கும்பல் எம்.ஜி.ஆர் வாகன பதிவெண்ணை பயன்படுத்தியது ஏன்?

  இதுகுறித்து  பழனி நகர காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த போலீஸார்  சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 வயது சிறுமியின் பெரியம்மா பையன் அவரை குரல்வளையை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.

  சிறுமி கடந்த சில நாட்களாக யாரோ ஒருவருடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு செல்போனில் நீண்ட நேரம் யாருடனோ பேசியுள்ளார். இதனை பார்த்த பாலமுருகன் யாருடன் செல்போனில் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு சிறுமியிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  Also Read:  கூல்டிரிங்க்ஸ் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் மரணம்.. அதிர்ச்சியில் தாத்தா உயிரிழப்பு

  ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பாலமுருகன் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரது குரல்வளையை நெறித்துள்ளார். இதன்காரணமாக சிறுமி மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு பதறிய பாலமுருகன்  சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளார். சிகிச்சை பலனின்றி 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பழனி நகர காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: அங்குபாபு (பழனி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Death, Murder, Phone call