Home /News /tamil-nadu /

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து.. 3 பேர் உயிரிழப்பு - மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து.. 3 பேர் உயிரிழப்பு - மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து

Dindigul District : பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேண்டுமென்றே கார் மோதியதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனிக்கு பாதயாத்திரையாக வந்த போது கார் மோதி மூன்று பேர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் பழனி - திண்டுக்கல் சாலையில் நேற்று இரவு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பேர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த தந்தை சாமிநாதன், மகன் கமலேஷ் மற்றும் உறவினர் சேகர் என மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர்.
    விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதை அடுத்து சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கார் மற்றும் உரிமையாளரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் கார் ஒன்று முன்பக்க கண்ணாடி உடைந்து நிலையில் கேட்பாரின்றி நீண்ட நேரமாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



    இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் காரை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில் நேற்று இரவு விபத்தை ஏற்படுத்திய கார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து காரின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேண்டுமென்றே கார் மோதியதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனிக்கு பாதயாத்திரையாக வந்த போது கார் மோதி மூன்று பேர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : அங்குபாபு நடராஜன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Dindigul

    அடுத்த செய்தி