கைவிட்ட பிஎஸ்என்எல் சேவை.. கவலையில் மலைகிராம மாணவர்கள்

பிஎஸ்என்எல் சேவை பிரச்னை

பிஎஸ்என்எல் சேவை கொடைக்கானல் பகுதியில் சரிவர கிடைக்காததால் மலைக்கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 • Share this:
  கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பி.எஸ்.என்.எல் சேவை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளதால்  மலைகிராம விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை,மன்னவனூர்,கூக்கால்,குண்டுபட்டி,கிளாவரை,பூண்டி  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதியில்  பி.எஸ்.என்.எல் சேவை மட்டும் கிடைப்பதால் 50,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  பி.எஸ்.என்.எல் சேவையை மட்டும்  பயன்படுத்தி வருகின்றனர். வேறு எந்த நெட்வொர்க்கையும்  அதிகமாக அவர்கள் பயன்படுத்துவது இல்லை.

  இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இம்மலை கிராமங்களில்  பி.எஸ்.என்.எல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வங்கி பரிவர்த்தனைகள் கூட சரி வர செய்ய இயலாமல் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தற்போது ஆன்லைனில் பாடங்கள் கற்பிக்கப்படுவதால் பிஎஸ்என்எல் சேவை கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

  அவசர தேவைக்கு கூட கைபேசி மூலம் யாரையும் அழைக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  அவசர தேவைகளுக்கு கூட 40 கிலோ மீட்டர்   தூரம் பயணம் செய்து கொடைக்கானல் நகர் பகுதிக்கு வந்து  ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்து செல்வதாக மலைகிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த விவகாரத்தில்  பிஎஸ்என்எல் நிர்வாகம் கவனம் செலுத்தி மேல்மலை கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவை தங்குத்தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக் ( கொடைக்கான‌ல்)   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: