இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிறுவர்கள்... பழனியில் பரபரப்பு
இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிறுவர்கள்... பழனியில் பரபரப்பு
ருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிறுவர்கள்
Dindigul District : சமீப நாட்களாக அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் பழனி நகரின் முக்கிய பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனியில் இரவு நேரங்களில் இருசக்கரவாகனத்தை சிறுவர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் முக்கிய பகுதியான தேவாங்கர் தெருவில் வசிப்பவர் பாலாஜி. இவரது வீட்டின் முன்பு இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது டிவிஎஸ் மொபட் இருசக்கர வாகனத்தை காலையில் காணாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பழனி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை சோதனையிட்ட போது, நள்ளிரவு 2 மணியளவில் இரு சிறுவர்கள் வாகனத்தை நோட்டமிட்டு சென்றுவிட்டு, சிறிதுநேரம் கழித்து மீண்டும் இரு சிறுவர்களும் அங்கு வந்து இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது.
இந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சிறுவர்களை தேடி வருகின்றனர். சமீப நாட்களாக அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் பழனி நகரின் முக்கிய பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.