Home /News /tamil-nadu /

பள்ளி சிறுமியின் வாயில் விஷம் ஊற்றிய காதலன்.. POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

பள்ளி சிறுமியின் வாயில் விஷம் ஊற்றிய காதலன்.. POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

சிறுமிக்கு விஷம் கொடுத்த காதலன்

சிறுமிக்கு விஷம் கொடுத்த காதலன்

தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை காதலித்து அவரது வீட்டில் பெண் கேட்டு தராததால் சிறுமி வாயில் விஷம் ஊற்றிய காதலன்.

    ஓட்டப்பிடாரம் அருகே  16 வயது சிறுமியை காதலித்து  அவரது வீட்டில் பெண் கேட்டு தராத ஆத்திரத்தில் சிறுமிக்கு விஷம் கொடுத்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே  செவல்குளம் காலனிதெருவைச் சேர்ந்த தெய்வ பாண்டியன் மகன் வேல்முருகன்(வயது22) . இவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகின்றார். இவர் அதே ஊரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 11 -ம்  வகுப்பு படிக்கும் 16 வயது  சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேல்முருகன் திருமணம் செய்வதற்காக அச்சிறுமியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார் அதற்கு பெற்றோர் தனது மகளுக்கு 16 வயதே நடப்பதால் பெண் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

    Also Read: கடைசியாக பார்த்து சென்ற காதலி..உருக்கமாக கடிதம் எழுதிவைத்து உயிரைவிட்ட இளைஞர் 

    இதையடுத்து கடந்தடிசம்பர் 28-ம் தேதி அன்று சிறுமியின் வீட்டிற்கு சென்ற வேல்முருகன் சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன்கையில் வைத்திருந்த மருந்தை சிறுமியின் வாயில் ஊற்றிவிட்டு  வேல்முருகன் குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் இருவரையும்  மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு சிறுமிக்கும் வேல்முருகன் இருவரும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Also Read:  திண்டுக்கல் இளைஞர் உடலை துளைத்த 6 குண்டுகள்.. நள்ளிரவில் அரங்கேறிய கொலை சம்பவம்

    இந்நிலையில் சிறுமியின் தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,  காவல்நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்: முரளிகணேஷ் (தூத்துக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Love issue, Love proposal, POCSO case, Poison

    அடுத்த செய்தி