ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

கொடைக்கானல்,

கொடைக்கானல்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை  தவிர்க்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல  தமிழக அரசு தடை விதித்தது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொடைக்கானலில் நாளை முதல் படகு குழாம் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து படகுகளை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை  தவிர்க்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல  தமிழக அரசு தடை விதித்தது.

  Also read: 94,000 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கிய ஆபத்தான சிறுகோள்!

  இதனிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து  வரும் நிலையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஆக.23) முதல் பூங்காக்கள், படகு குழாம்கள் செயல்பட தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டு இருந்தது .

  இந்நிலையில் மலைவாசஸ் தலமான திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு படகு குழாம்கள் மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு  படகு குழாம்களில்  நாளை முதல் படகு சேவை துவக்கப்பட உள்ளது.

  Also read:  வாடகை செலுத்தியும் வங்கி லாக்கரை நீண்ட காலம் இயக்காமல் இருந்தால் என்ன ஆகும்? – ரிசர்வ் வங்கி புது விதிமுறைகள் அமல்!

  சுற்றுலா பயணிகள்  படகு சவாரி மேற்கொள்வதற்காக  சேதமடைந்த படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் தரை பலகை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  பாதுகாப்பு கவச உடைகளை சுத்தம் செய்யும்  பணி  உள்ளிட்ட பணிகளிலும்  படகு குழாம் பணியாளர்கள்  மும்மரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

  நீண்ட இடைவெளிக்கு பிறகு படகு குழாம்கள் திறப்பதால் அப்பகுதியில் உள்ள  சிறு குறு கடை வியாபரிகள் மற்றும் படகு ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் கொடைக்கானலுக்கு வந்த போதிலும் படகு சவாரி மேற்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தவித்த சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  கொடைக்கானல் செய்தியாள‌ர் ஜாப‌ர்சாதிக்

  Published by:Arun
  First published:

  Tags: Dindugal, Kodaikanal, News On Instagram, Tourist spots