Home /News /tamil-nadu /

Sabarimala Devotees | ஆந்திர ஐயப்ப பக்தர்கள் காரில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம் - அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

Sabarimala Devotees | ஆந்திர ஐயப்ப பக்தர்கள் காரில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம் - அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

கொடைக்கானல்

கொடைக்கானல்

சபரிமலை சென்று திரும்பி ஐயப்ப பக்தர்கள் காரில் இருந்த சடலம் தொடர்பாக சிறுவன் கொடுத்த வாக்குமூலம் இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்த‌ ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு  கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து  தனியார்  தங்கும் விடுதியில் தங்கி மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாகி  ரத்த களரியுடன்  துடி துடித்த நபரின் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாராயணரெட்டி, ரவி,  கிஷோர், சுனில், கேசவலு, ரவி புக்யா, மஞ்சுநாத், நாகராஜூ  மற்றும் அவரது மகனான சரண் சாய் (வயது 11) உள்ளிட்ட 9 நபர்கள் இன்னோவா காரில் கடந்த 09.12.2021 தேதி அன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து  சபரிமலைக்கு புறப்பட்டு சென்று யாத்திரையை முடித்து விட்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 11.12.2021 அன்று சுற்றுலா வந்துள்ளனர்.

    அன்று இரவு கலையரங்கம் பகுதி அருகே உள்ள  தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதில் ஓட்டுநர் மற்றும் நாகராஜூ மகன் 11 வயது சிறுவன் தவிர அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து அதிகமான மது போதையில் இருந்த நகராஜுக்கும்  உடன் வந்த நண்பர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாகியுள்ளது. இதில் நாகராஜுக்கு வயிற்று பகுதி மற்றும் வாயில் பலத்த காயம் ஏற்பட்டு அறையே ரத்த வெள்ளத்தில் காட்சியளித்துள்ளது.

    Also Read: கர்ப்பிணியை 6 கி.மீ டோலிகட்டி சுமந்து வந்த மக்கள் - உயிரை பணயம் வைக்கும் கர்ப்பிணிகள்

    இதனை தொடர்ந்து மறுநாள் அனைவரும் கொடைக்கானலிருந்து புறப்பட்டு ஆந்திரா சென்றுள்ளனர். அப்போது திண்டுக்கல் பகுதிக்கு சென்ற உடனே நாகராஜு மயக்கம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நாகராஜூவை தனியார் மருத்துவமனையில் அவருடன் வந்த சக நண்பர்கள் அனுமதிக்கின்றனர்,மருத்துவமனையில் நாகராஜூவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இறந்தவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் இறந்தவர் உடலை வாகனத்தின் பின் இருக்கையில்  படுக்கவைத்து ஆந்திரா புறப்பட்டுள்ளனர்,அப்போது வேடசந்தூர் கல்வார்பட்டி சோதனை சாவடியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் வாகன தணிக்கையில்  ஈடுப்பட்டுள்ளனர்,பின்னால் படுக்கவைத்து இருந்த நகராஜுவின் உடலை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த நகராஜுவின் மகன் சரண் சாய் 11 என்ற சிறுவன் தனது தந்தையை குடிபோதையில் நாராயண ரெட்டி, கேசவலு மற்றும் ரவி கிஷோர் ஆகியோர் தாக்கியதாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் வாகனத்தின் இருந்த சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைத்து திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

    Also Read: மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி மாணவி.. அதிர்ச்சியில் பிறந்த குழந்தை - நடந்தது என்ன?

    மேலும் இன்னோவா காரில் பயணித்த சிறுவன் உள்ளிட்ட 8 நபர்களை கொடைக்கானல் போலீசார்  கொடைக்கானலுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நாகராஜுவின் மரணம் சந்தேக மரணம் என்று கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் நாகராஜுவின் உடற்கூறு ஆய்வின் முடிவில் அதிக மது குடித்ததால் ரத்த குழாய் மற்றும் உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டும் குளிரின் காரணமாகவும்  நாகராஜு இறந்து விட்டதாக திண்டுக்கல் மருத்துவர்கள் தெரிவித்ததாக கொடைக்கானல் மகளிர் காவல் ஆய்வாளரால் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வந்த சிறுவன் உள்ளிட்ட 8  நபர்களையும்  கொடைக்கானல் காவல்துறையினர் விடுவித்தனர். இந்நிலையில் இவர்கள்  தங்கியிருந்த அறையில் நாகராஜு  ரத்த களரியுடன் துடி துடித்த காட்சியானது தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    செய்தியாள‌ர் : ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Kodaikanal, Murder, Sabarimala devotees, Warm Drinks

    அடுத்த செய்தி