திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை ஈ.பி.காலனி சத்யா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 35). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அதே நூற்பாலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வி(45) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
செல்வி தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சிவகுமார் அடிக்கடி திண்டுக்கல்லில் உள்ள செல்வி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
செல்விக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
Also read: தாயுடன் கள்ளத்தொடர்பு.. 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை - சிறுமிகளின் வாக்குமூலம் கேட்டு அதிர்ந்த போலீஸார்
அப்போது சிவக்குமார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வடமதுரையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாய் செல்வியிடம் கூறியபோது, வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது உறவினர்களிடம் நடந்த விஷயத்தை பற்றி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். மகளிர் போலீசார் சிவக்குமார், செல்வி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.