Home /News /tamil-nadu /

திண்டுக்கல்லில் பள்ளி மாணவி எரித்துக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல்லில் பள்ளி மாணவி எரித்துக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் பள்ளி மாணவி வழக்கு

திண்டுக்கல் பள்ளி மாணவி வழக்கு

குற்றவாளியைக் கைது செய்தால் மட்டுமே குழந்தையின் உடலை வாங்குவோம் எனக் கூறி குழந்தையின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்லில் பள்ளி மாணவி உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சலூர் ஊராட்சியில் ஊராட்சி அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று மாலை ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது பெற்றோர்கள் பள்ளியின் பின்புறம் இருந்து தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

    இந்நிலையில் குழந்தையின் உறவினர்கள் நேற்று தாண்டிக்குடி ஒட்டன்சத்திரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியர் நேரடி விசாரணை செய்து மூன்று ஆசிரியர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    Also Read: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு

    இந்நிலையில் ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் இருந்த குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் உடலை வாங்க மறுத்து குழந்தையின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Also Read: பெண்ணின் உயிரைப் பறித்த கள்ளக்காதல்.. - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

    குழந்தையின் உடலை வாங்கிச் செல்லுங்கள் என சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது குழந்தையின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் குழந்தையின் உடலை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Also Read:  ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. தினசரி வகுப்புகள் குறித்து 25-ம் தேதி முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

    வாக்குவாதம் முற்றிய நிலையில் பல முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும்  குழந்தையின் உறவினர்கள் குழந்தகயின் உடலை வாங்க முடியாது குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி மருத்துவமனை உள்ளே சென்றனர்.

    செய்தியாளர்: சங்கர் ( திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Dindugal, Government school, School

    அடுத்த செய்தி