Home /News /tamil-nadu /

பொள்ளாச்சியில் மாணவி கொலை: பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

பொள்ளாச்சியில் மாணவி கொலை: பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

கொலை செய்யப்பட்ட மாணவி

கொலை செய்யப்பட்ட மாணவி

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் , கோவையில் 6 வயது சிறுமி கொலை சம்பவம் போன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இன்னும் மக்கள் மனதில் இருந்து அகலாத நிலையில் கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவி, பொள்ளாச்சி அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊருக்கு செல்வதற்கு கல்லூரி விடுதியில் அனுமதி பெற்று கிளம்பியுள்ளார் .

    ஆனால், அன்று இரவு ஒட்டன்சத்திரத்திற்கு மாணவி வராத நிலையில், நேற்று காலை மாணவியின் பெற்றோர் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாணவி காணாமல் போனதாக காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் .

    இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி என்னும் கிராமத்தில் உடைகள் களையப்பட்டு அலங்கோலமான நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு இளம்பெண் சடலம் கிடப்பதாக கோமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    படிக்க... தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

    போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் இறந்து கிடப்பது காணமல் போன தனியார் கல்லூரி மாணவி என தெரியவந்தது. இதையடுத்து கோமங்கலம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவி அணிந்திருந்த தங்க தோடு, தங்க செயின், தங்க வளையல் போன்ற தங்க நகைகள் திருடு போகாமல் அப்படியே இருந்ததால், இந்தக் கொலை சம்பவம் நகைக்காக நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

    மேலும் மாணவியின் உடைகள் அவிழ்க்கப்பட்டு அலங்கோலமாகக் கிடந்ததால், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கோமங்கலம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கைப்பற்றப்பட்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    படிக்க... மீண்டும் மீண்டும் வலையில் சிக்கும் இளம்பெண்கள்: தீர்வு தான் என்ன?

    இதனிடையே மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் உடனடியாக தங்களது விசாரணையைத் துவக்கி நடத்தி வருகின்றனர். மாணவி கல்லூரியில் இருந்து வெளியேறியது முதல் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    கோவை ஆவாரம்பாளையம், காந்திபுரம் மற்றும் பொள்ளாச்சி, கோமங்கலம், அம்பராம்பாளையம், ஆனைமலை ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .

    மாணவியின் செல்போன் சிக்னல் இந்தப் பகுதிகளை காட்டியிருப்பதால், இந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மாணவி கடத்தப்பட்டரா? அல்லது தெரிந்த அறிமுகமான நபர்களுடன் சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உயிர் இழந்த மாணவிக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு சேலை எடுப்பதற்காக கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு மாணவி ஊருக்கு கிளம்பிய நிலையில் இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

    படிக்க... பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம்: கொந்தளிக்கும் பொதுமக்கள்

    உறவினர் ஒருவரை மாணவி திருமணம் செய்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதால், காதல் விவகாரம் காரணமாக மாணவி கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்ற ஒரு கோணத்திலும் கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாணவியின் செல்போன் அழைப்புகளையும், ஆவாரம்பாளையம், காந்திபுரம்,பொள்ளாச்சி,கோமங்கலம், அம்பராம்பாளையம் பகுதியில் செல்போன் டவர்களில் பதிவாகியுள்ள எண்களையும் ஒப்பிட்டு போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், கொலையாளி இந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம் , கோவையில் 6 வயது சிறுமி கொலை சம்பவம் போன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இன்னும் மக்கள் மனதில் இருந்து அகலாத நிலையில், கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது கோவை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Also See...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:


    Also watch

    Published by:Sankar
    First published:

    Tags: Pollachi, Pollachi sexual harassment

    அடுத்த செய்தி