முயல்களை வதம் செய்யாமல், சைவ முறையில் பொதுமக்கள் சாமி கும்பிட வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

முயல்களை வதம் செய்யாமல், சைவ முறையில் பொதுமக்கள் சாமி கும்பிட வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

முயல்கள்

மான்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
முயல்களை வதம் செய்யாமல், சைவ முறையில் பொதுமக்கள் சாமி கும்பிட சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று வினாக்கள்- விடைகள் நேரத்தின் போது, மேலூர் கிராம மக்கள் திருவிழா காலத்தின் போது முயல்களை வேட்டையாடி சாமி கும்பிட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது கட்டுப்பாடு காரணமாக் வேட்டையாடுவதில்லை எனவும், கருவை காடுகளில் உள்ள முயல் வேட்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து முயல்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று மேலூர் சட்டமன்ற உறுப்பினர்  பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வனப்பாதுகாப்பே தமிழக அரசின் கொள்கை என்றும், வனவிலங்குகளை கொல்வதற்கு, வதம் செய்வதற்கும் யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் குறிப்பட்டார்.

மேலூர் மக்களைக் கட்டுப்படுத்தி, எதையும் வதம் செய்யாமல், சைவ முறையில் சாமி கும்பிட சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

tn assembly
மாதிரிப் படம்


இதேபோல, மான்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சாத்தூர் தொகுதியில் அதிகமாக மான்கள் இருப்பதாகவும் அதனை பாதுகாக்க மான்கள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்று ராஜவர்மன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சாத்தூர் பகுதிகளில் மான்கள் அதிகமாக இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் மான்கள் காட்டைவிட்டு வெளியே வருவதாகவும் எனவே மான்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை வனத்துறையினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Must Read: என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
Published by:Suresh V
First published: