தினகரனின் புதிய கட்சி தற்காலிக ஏற்பாடுதான் – திவாகரன்

news18
Updated: March 13, 2018, 4:50 PM IST
தினகரனின் புதிய கட்சி தற்காலிக ஏற்பாடுதான் – திவாகரன்
டிடிவி தினகரன்
news18
Updated: March 13, 2018, 4:50 PM IST
‘வருகிற 15-ஆம் தேதி தினகரன் கட்சி தொடங்கவுள்ளது தற்காலிக ஏற்பாடுதான்’ என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

திவாகரன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: வருகிற 15-ஆம் தேதி தினகரன் கட்சி தொடங்க இருப்பது தற்காலிக ஏற்பாடாகும்.

வரக்கூடிய தேர்தலை சந்திப்பதற்கு ஒரு அடையாளம் தேவை என்பதால் இந்த தற்காலிக கட்சியை தினகரன்  தொடங்க இருக்கிறார்.

அதிமுகவையும், அதன் சின்னத்தையும் மீட்கும் வரை இந்த தற்காலிக அடையாளம் இருக்கும். புதிய கட்சி தொடங்குவது என்பது காலதாமதமான முடிவு அல்ல. சரியான நேரத்தில் தான் தொடங்க உள்ளோம்.

பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறுவதாக வரும் தகவல் பொய்யானது. விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அவர் நடந்து வருகிறார் என்றார் திவாகரன்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்