பா.ஜ.க எதிர்ப்பில் வலுகாட்டும் தினகரன்! சி.ஏ.ஜி அறிக்கையை விமர்சிக்கும் நமது எம்.ஜி.ஆர்

பா.ஜ.கவுடன் அ.தி.மு.க இணக்கமாகச் செல்லும் நிலையில் அ.ம.மு.க பா.ஜ.கவை விமர்சனம் செய்துவருகிறது.

news18
Updated: February 14, 2019, 9:20 AM IST
பா.ஜ.க எதிர்ப்பில் வலுகாட்டும் தினகரன்! சி.ஏ.ஜி அறிக்கையை விமர்சிக்கும் நமது எம்.ஜி.ஆர்
டி.டி.வி.தினகரன்
news18
Updated: February 14, 2019, 9:20 AM IST
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சி.ஏ.ஜி அறிக்கை குறித்து நமது எம்.ஜி.ஆர் தலையங்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் இடம்பெறுவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனியாக தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பா.ஜ.கவுடன் அ.தி.மு.க இணக்கமாகச் செல்லும் நிலையில் அ.ம.மு.க பா.ஜ.கவை விமர்சனம் செய்துவருகிறது.

நேற்று, ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய ஆய்வறிக்கையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழு மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கும் வகையில் உள்ளது என்று நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாளின் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், சி.பி.ஐ, சி.ஏ.ஜி போன்ற தன்னாட்சி அமைப்புகள் மத்திய அரசால் தவறாக வழிநடத்தப்படுகின்றன என்று நமது எம்.ஜி.ஆரில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. முசாஃபர் நகரில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்த வழக்கின் விசாரணை அதிகாரியை மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் சி.பி.ஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் மாற்றினார் என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவிப்பதற்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க எதிர்ப்பு நிலையில் டி.டி.வி.தினகரன் உறுதியாக இருப்பதையே இந்தக் கட்டுரை உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

Also see:

First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...