என்னைப் பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார்! தினகரன் பதிலடி

இந்தப் பேச்சு தொடர்ந்தால், கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிடுவேன் என்று எச்சரிக்கைவிடுத்திருந்தேன். தங்க தமிழ்ச் செல்வன் விஸ்வரூபம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

news18
Updated: June 25, 2019, 12:08 PM IST
என்னைப் பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார்! தினகரன் பதிலடி
டி.டி.வி.தினகரன்
news18
Updated: June 25, 2019, 12:08 PM IST
தங்க தமிழ்ச் செல்வன் என்னைப் பார்த்தால் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.


டி.டி.வி.தினகரனை திட்டி தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியான நிலையில், தேனி மாவட்ட நிர்வாகிகள் தினகரனை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பேசிய டி.டி.வி.தினகரன், ‘தங்க தமிழ்ச்செல்வன் செயல்பாடு சரியில்லை என்று கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டியிருந்தனர். சமீபத்தில், தங்க தமிழ்ச்செல்வன் ஊடகத்துக்கு அளித்தப் பேட்டி முறையற்று இருந்ததால் நான் அவரை கண்டித்திருந்தேன்.

இந்தப் பேச்சு தொடர்ந்தால், கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிடுவேன் என்று எச்சரிக்கைவிடுத்திருந்தேன். தங்க தமிழ்ச் செல்வன் விஸ்வரூபம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர், என்னைப் பார்த்தால் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார். தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார். அவரிடம் விளக்கம் கேட்கும் வாய்ப்பு இல்லை.

சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிப்போம். ஜூலை மாதம் முதல் வாரத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...