• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தினகரன், திமுகவினரின் தூண்டுதலால்தான் போராட்டங்கள் நடக்கின்றன – மதுசூதனன்

தினகரன், திமுகவினரின் தூண்டுதலால்தான் போராட்டங்கள் நடக்கின்றன – மதுசூதனன்

மதுசூதனன்

மதுசூதனன்

முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க அதிமுகவினர் தற்போது நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்றார் மதுசூதனன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தினகரன் மற்றும் திமுகவினரின் தூண்டுதலின் காரணமாகவே, கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் செல்லும்போது போராட்டங்கள் நடைபெறுகின்றன என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்தார்.

    புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அதிமுக சார்பில் வடசென்னை பகுதியிலிருந்து 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 16 டன் எடையுள்ள இந்த பொருட்களை மதுசூதனன் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கிணங்க அதிமுகவினர் தற்போது நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

    புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள், தினகரன் மற்றும் திமுகவினரின் தூண்டுதலின் காரணமாகவே நடைபெறுகின்றன. இடைத்தேர்தல் வந்தால் அதிமுகதான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். தினகரனுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதாவின் பெயரால் அவர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்.

    புயல் பாதிப்பு நிவாரணப் பணிகள் குறித்து விமர்சனம் செய்ய திமுக-வுக்கு எந்த தகுதியும் இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட புயல் நிவாரணப் பணிகளை நேரில் சென்று பார்க்காதது கடந்த கால வரலாறு’’ என்றார் மதுசூதனன்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: