டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரம் - ஐசிஐசிஐ வங்கி தேர்வு

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக கோரப்பட்ட ஒப்பந்தத்தில் ஐசிஐசிஐ வங்கி தேர்வாகி உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரம் - ஐசிஐசிஐ வங்கி தேர்வு
கோப்புப்படம்
  • Share this:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் 5,330 மதுபானக் கடைகள் தமிழகத்தில் உள்ளன. அனைத்து மதுபானக் கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக வங்கிகளிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் 7 வங்கிகள் கலந்து கொண்டன.

அவற்றில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மற்ற வங்கிகளை விட குறைவான ஒப்பந்தப்புள்ளி தொகை குறிப்பிட்டு மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்கு தேர்வாகி உள்ளது. டாஸ்மாக் இயக்குநர் குழுமம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் இது தொடர்பான ஒப்பந்தம் செய்துகொள்ள டாஸ்மாக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்குரிய தொகையை டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. (ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம்), பீம் யு.பி.ஐ, யு.பி.ஐ. கியூ ஆர் கோட், க்ரெடிட் கார்டு, இன்டர்நேஷனல் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவும் பணி சுமார் 2 மாதங்களில் நிறைவடையும். டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.


Also read: விமான விபத்தையும் நிலச்சரிவையும் கையாண்ட முறையில் கேரள அரசு பாகுபாடு - சீமான் குற்றச்சாட்டு

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் வழியாக விற்பனை தொகையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை தொகையை மின்மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading