Home /News /tamil-nadu /

டிஜிட்டல் காயின் மோசடி... கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட 6 இடங்களில் ரெய்டு..

டிஜிட்டல் காயின் மோசடி... கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட 6 இடங்களில் ரெய்டு..

ரெய்டு

ரெய்டு

டிஜிட்டல் காயின் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக 100 கோடி ரூபாய் மோசடி என புகார் எழுந்ததையடுத்து 6 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    டிஜிட்டல் காயின் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக 100 கோடி ரூபாய் மோசடி என புகார் எழுந்ததையடுத்து, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட 6 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    யுனிவெர் காயின் என்ற டிஜிட்டல் காயின் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 6 பேரின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஓசூரில்  A.K டிரேடர்ஸ் நிறுவனத்தில் சோதனை செய்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி  அலுவலகத்திற்க்கு தற்போது  சீல் வைத்தனர்.

    ALSO READ | EXCLUSIVE: தென்காசி தீண்டாமை கொடுமை: கைதானவர்களை ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு... முக்கிய சட்டப்பிரிவைப் பயன்படுத்தப் போவதாக தகவல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த அருண்குமார், பர்கூர் பகுதியை சேர்ந்த சங்கர், பிரகாஷ் மற்றும் சீனிவாசன், கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பகுதியை சேர்ந்த வேலன் ஆகிய 6 பேருக்கு சொந்தமான 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை முதல் நடைபெற்ற வரும் இந்த சோதனையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Digital Currency, Police

    அடுத்த செய்தி