தமிழகத்தில் முதன்முறையாக, குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதை கண்காணிக்கும் டிஜிட்டல் கார்டு நடைமுறை..
தமிழகத்தில் முதன்முறையாக, குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதை கண்காணிக்கும் டிஜிட்டல் கார்டு நடைமுறை..
தமிழகத்திலே முதல் முறையாக புதுக்கோட்டையில் குப்பைகள் தினசரி வீடு வீடாக சென்று தூய்மைப் பணியாளர்கள் தரம் பிரித்து சேகரிப்பதை கண்காணிக்க டிஜிட்டல் கார்டு மூலம் மின்னணு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொன்னமராவதி பேரூராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் கார்டு மென்பொருளை யூனிடெக் டெக்னாலஜி நிறுவனத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அந்தப் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது, தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள மின்னணு டிஜிட்டல் கார்டு முறைமூலம் தூய்மைப் பணியாளர்கள் தினசரி வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் மக்கும் குப்பை, மக்கா குப்பை சேகரிக்க தனித்தனி குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் சேகரித்து வரும் குப்பைகளை தினசரி தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் டிஜிட்டல் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த கார்டை குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் கொடுத்தால் அவர்கள் கொண்டுவரும் மின்னணு இயந்திரத்தில் அந்த கார்டை பதிவு செய்து கொள்கின்றனர்.
கார்டு பதிவான பிறகு நன்றி என குரல் மூலம் ஒளி வருகின்றது. அந்த ஒளி வந்த பிறகு குப்பை வழங்கியவர் எந்த நேரத்தில் வழங்குகிறார் யார் குப்பையை வழங்கியது என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவாகி விடுகின்றது. இதன்மூலம் குப்பைகளை முறையாக துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று அதனை வாங்குவதற்கும் குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கும் பொது மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கு இது போன்ற மின்னணு டிஜிட்டல் கார்டு முறை பயனுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கார்டு முறையை கண்டுபிடித்த யுனிடெக் டெக்னாலஜி நிறுவனத்தை சேர்ந்த ராஜ்குமார் கூறுகையில், தமிழகத்திலேயே முதல்முறையாக மின்னணு முறையில் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் தரம்பிரித்து வாங்குவதை கண்காணிக்க எளிய முறையில் மென்பொருளை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும்குப்பை சேகரிக்கும் நேரம் மற்றும் குப்பை சேகரிக்கப்பட்ட செய்யப்படாத வீடுகள் பட்டியல் என அனைத்தும் இந்த மென்பொருள் மூலம் எளிதாக கண்காணிக்க முடியும். தூய்மைப் பணியாளர்கள் முறையாக ஒவ்வொரு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க முடியும்.
ஒரு வீட்டின் உரிமையாளர் ஒரு வாரத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு ஆண்டுக்கு எவ்வளவு குப்பைகளைதூய்மை பணியாளரிடம் வழங்கி உள்ளார் என்பதையும் இந்த மின்னணு டிஜிட்டல் கார்டு முறை மூலம் எளிதாக கண்காணிக்க முடியும். இந்த முறையை நாடு முழுவதிலும் செயல்படுத்தினால் தூய்மையான இந்தியாவை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை“ என்றார்.
இது தொடர்பாக பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி கூறுகையில், வீட்டு உரிமையாளர் குப்பையை தூய்மை பணியாளரிடம் வழங்காமல் வீதியால் கொட்டியிருந்தாலும் வீட்டு உரிமையாளர் வீட்டை பூட்டி வெளியூர் சென்றிருந்தாலும் தூய்மைபணியாள குப்பை வாங்கி செல்லாமல் இருந்திருந்தாலும் இது அனைத்தும் மின்னணு டிஜிட்டல் கார்டு மூலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரியவரும்.தற்போது இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது“ என்றார்.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.