ரஜினிகாந்தை இலங்கைக்கு அழைத்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்!

ரஜினிகாந்தை இலங்கைக்கு அழைத்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்!
ரஜினிகாந்த் - விக்னேஷ்வரன் சந்திப்பு
  • Share this:
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இலங்கை வவுனியாவில் வீடுகளை இழந்த மக்களுக்கு லைகா நிறுவனத்தின்  சார்பில்  வீடுகளை இலவசமாக வழங்கும் விழா யாழ்ப்பாணத்தில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் செல்ல இருந்ததால் பல்வேறு எதிர்ப்புகள் தமிழகத்தில் கிளம்பியது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


லைகா நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என அப்பொழுது அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த விழாவில் கலந்துகொள்வதை ரத்து செய்வதாக ரஜினிகாந்த் அறிவித்தார். அதன்பிறகு லைகா தயாரிப்பில்  பல்வேறு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் அவர் இலங்கை சென்று வர திட்டமிடவில்லை.

இந்தநிலையில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.

அப்போது இலங்கையில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ரஜினிகாந்திடம் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். பின்னர் அவரை இலங்கைக்கு வர வேண்டும் எனவும் விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்திருக்கிறார்.  எனவே விரைவில் ரஜினிகாந்த்  இலங்கை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், டிரைவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு - என்ன நடந்தது நள்ளிரவில்?
First published: January 12, 2020, 6:22 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading