கேட்பாரற்று கிடந்த 16 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு!

கேட்பாரற்று கிடந்த 16 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு!
News18
  • News18
  • Last Updated: January 20, 2020, 9:33 AM IST
  • Share this:
புதுக்கோட்டை அருகே கேட்பாரற்று கிடந்த 16 சவரன் தங்க நகையுடன் கூடிய மணி பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற திருமயம் பகுதியைச் சேர்ந்த நாடியம்மன் என்பவர் கேட்பாரற்று கிடந்த மணி பர்சை பார்த்து எடுத்துள்ளார். அதில் இரண்டு சவரன் தங்க வளையல் ஒரு மோதிரம் உட்பட‌16 சவரன் தங்க நகையும் 500 ரூபாய் பணமும் இருந்துள்ளது.

இதனையடுத்து அந்த மணிபர்சை நாடியம்மன் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் திருமயம் காவல் நிலையத்திற்கு மணிபர்சை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.


இதற்கிடையில் மணிபர்சை தொலைத்தவர் அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த மீனாள் போலீஸாரிடம் புகார் கொடுக்க வந்துள்ளார். இந்நிலையில், மீனாள் தொலைத்தது நாடியம்மன் எடுத்த மணிபர்ஸ் தானா என்று உறுதி செய்த போலீசார் பொன்னமராவதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் மணிப்பர்ஸ்க்கு சொந்தக்காரரான மீனாளிடம் ஒப்படைத்தனர்.

கேட்பாரற்று கிடந்த மணிபர்சை உரியவரிடம் ஒப்படைக்க உதவிசெய்த நாடியம்மன் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் சிக்கந்தர் உள்ளிட்டோரின் நேர்மையை காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்