சத்துணவில் கடலை மிட்டாய்... கோவில்பட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் அசத்தல் பிரச்சாரம்

சத்துணவில் கடலை மிட்டாய்... கோவில்பட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் அசத்தல் பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி

விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தாமிரபரணி, செண்பகவல்லி ஆணை நீர் இப்பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்...

  • Share this:
ஸ்டார் வேட்பாளர்களுக்கு இடையே மக்களின் வாழ்வாதர அடிப்படையினை உயர்த்துவதற்கான செயல்முறைகளை கூறியும், மதுவின் கோர பசியினை பெண்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பது மட்டுமின்றி, தீப்பெட்டியை அரசே கொள்முதல் செய்யும்,  சத்துணவில் கடலை மிட்டாய் கொண்டு வர நடவடிக்கை என ஆர்ப்பாட்டம் இல்லமால் கணவருடன் பைக்கில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் அசத்தி வருகிறார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி.

தமிழகத்தில் நட்சத்திர அந்துஸ்பெற்ற தொகுதிகளில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியும் ஒன்று, காரணம் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் சீனிவாசன், மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் என 26 பேர் வேட்பாளராக களம் காண்கின்றனர்.

வலுவான, ஸ்டார் அந்துஸ்து வேட்பாளர்களுக்கு இடையே எளிய முறையில் தனது தேர்தல் பிரச்சாரம் மூலமாக அசத்தி வருகிறார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி. கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 1.27 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் தற்பொழுது தனது பிரச்சாரம் மூலமாக உற்சாகமாக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார் கோமதி.

மற்ற வேட்பாளர்கள் வாகனங்கள், மக்கள் கூட்டம், ஆரத்தி எடுப்பது என பிரச்சாரங்களை சந்தித்து வரும் நிலையில் கோமதி, தனது கணவரின் பைக் மூலமாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தனது பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில்தான் அதிகளவில் தனது தேர்தல் பிரச்சாரத்தினை செய்கிறார். அதிலும் பெண்களிடம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தும், தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் செய்யக்கூடிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறார்.

பிரச்சாரத்திற்கு இடையே நமது நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கோவில்பட்டி தொகுதியில் மானவாரி விவசாயம் அதிகமாக உள்ளது. போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி, கடலைமிட்டாய், நூற்பாலை, ஆயத்த ஆடை தொழில்கள் நலிவுற்று காணப்படுகிறது. தான் வெற்றி பெறும் போது அதற்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தாமிரபரணி, செண்பகவல்லி ஆணை நீர் இப்பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர்கள் வாழ்வாதரம் மேம்படுவதற்காக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் செய்த தீப்பெட்டியை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யவும், சத்துணவில் கடலை மிட்டாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன், தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் போது அடிப்படை வதிகள், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகள் சரியாக கிடைக்கமால் இருப்பது தெரிகிறது. இது குறித்து மக்கள் விவாதம் செய்கின்றனர். அவர்களின் எங்களில் செயல்திட்டங்களை எடுத்து கூறி அனைவருக்கும் அடிப்படை வசதி, கல்வி, மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறேன்.

Must Read : அமைச்சர் கார் அருகே பட்டாசு வெடித்த விவகாரம்: அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

 

ஜி.எஸ்.டியினால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு, சாலை முதல் கீழே கொட்டும் குப்பை வரைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சொல்லும்போது கோவில்பட்டி தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக குரல் கொடுப்பேன். மேலும் கோவில்பட்டி தொகுதியை வளமான தொகுதியாக மாற்றுவேன்” என்றார்.
Published by:Suresh V
First published: