• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டீசல் விலை வரலாறு காணாத உச்சம்: பல மாவட்டங்களில் ரூ.100ஐ கடந்தது

டீசல் விலை வரலாறு காணாத உச்சம்: பல மாவட்டங்களில் ரூ.100ஐ கடந்தது

டீசல் விலை உயர்வு

டீசல் விலை உயர்வு

டீசல் விலை சென்னையிலும் விரைவில் ரூ.100-ஐ எட்டும் எனத் தெரிகிறது, இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • Share this:
    கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் டீசல் வில் 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன்படி, கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 104.85க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.63க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காட்டுமன்னார் கோவில் பகுதியில், பெட்ரோல் விலை ரூ.104.52க்கும், டீசல் விலை 100.53க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் நேற்று, பெட்ரோல் விலை ரூ.104.16 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.99.95 ஆகவும் இருந்தது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 105.05க்கும், 1 லிட்டர் டீசல் விலை ரூ.100.61க்கும், ஸ்பீடு பெட்ரோல் ரூ. 107.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஒசூரிலும டீசல் விலை 100ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒசூர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் ஒரு லிட்டர் டீசலின் விலை 100.17 ரூபாய்க்கும் பெட்ரோல் 104.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது. 102 ரூபாய் 10 காசுகளாக இருந்த பெட்ரோலின் விலை, இன்று 30 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 40 காசுகளாக உயர்ந்துள்ளது. 97 ரூபாய் 93 காசுகளாக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை, 33 காசுகள் அதிகரித்து 98 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனையாகிறது.

    Must Read : "என்ன கால் மட்டும் தான் இருக்கு?" - நடுரோட்டில் சரக்கு வாகனத்தை நிறுத்தி போதையில் படுத்துறங்கிய இளைஞரால் பரபரப்பு

    தமிழகத்தில் ஏற்கனவே சில இடங்களில் டீசல் விலை நூறு ரூபாயை கடந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், நடுத்தர மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலை சென்னையிலும் விரைவில் ரூ.100-ஐ எட்டும் எனத் தெரிகிறது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: