ஊரடங்கு விவகாரத்தில் முதலமைச்சர் முன்னுக்குப்பின் முரணாக பேசவில்லை - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ விளக்கம்

கோப்புப் படம்

  • Share this:
    முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப்பின் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாப்பன் ஓடை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்களை அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நேற்றுவரை ஊரடங்கு தேவை எனக் கூறி வந்த மு.க.ஸ்டாலின், தற்போது ஊரடங்கு மட்டும் போதுமா எனக் கேள்வி எழுப்புவதாக விமர்சித்தார். மேலும் திமுக மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு செயல்படவில்லை என்றும், எதிரி கட்சியாகவே செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
    Published by:Rizwan
    First published: