நடிகர் விஜய்க்கு எதிராக பாஜக செயல்படவில்லை - பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

பொன் ராதாகிருஷ்ணன்

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடிகர் விஜய்க்கு எதிராக பாஜக செயல்படவில்லை என்றும் என்எல்சி-யில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதில் தவறு நடந்திருப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் வேல்முருகனுக்கு அவர் அளித்த பேட்டியில், நடிகர் விஜய்க்கு எதிராக பாஜக செயல்படவில்லை என்று கூறிய அவர், என்எல்சி படப்பிடிப்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதில் தவறு நடந்திருப்பதாகவும் கூறினார்.

  சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”தவறான சில புரிதல்களின் காரணமாக சில இயக்கங்களைச் சார்ந்தவர்களும் மாணவர்களும் மத்திய அரசின் இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவதற்குத் தூண்டப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.  திமுக சிஏஏ-வுக்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் பற்றி கூறுகையில், இத்தனைக் கையெழுத்துகளைப் போட்டது யார் என்று திமுக-விடம் கேட்க வேண்டும். திமுக பெற்றுள்ள கையெழுத்துகள் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் தந்தைக்குப் பதிலாக மாணவனே இட்ட கையெழுத்தைப் போன்றது.  சிஏஏ-வால் என்ன பாதிப்பு என மக்கள் கேட்கின்றனர் என தெரிவித்தார்.
  Published by:Rizwan
  First published: