ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டாரா?- ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்

news18
Updated: July 12, 2018, 9:51 PM IST
ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டாரா?- ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்
ரஜினியுடன் ராஜுமகாலிங்கம்
news18
Updated: July 12, 2018, 9:51 PM IST
சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மையல்ல என்று ரஜினி மக்கள் மன்றம் மறுத்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், “சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து  ராஜூ மகாலிங்கத்தை  நீக்கிவிட்டதாகச் செய்தி பரவிவருகிறது, இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.ராஜுமகாலிங்கம் சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் கிரியாட்டிவ் ஹெட்டாக பணியாற்றிவந்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு லைக்கா நிறுவனத்திலிருந்து விலகிய ராஜுமகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஜனவரியில் தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், இன்னும் தனி அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...