• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சித்தேர்தல்: ‘ரூ.500 தராததால் யாருக்கும் வாக்கு கிடையாது’... வாக்குச் சீட்டில் எழுதிய வாக்காளர்!

உள்ளாட்சித்தேர்தல்: ‘ரூ.500 தராததால் யாருக்கும் வாக்கு கிடையாது’... வாக்குச் சீட்டில் எழுதிய வாக்காளர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஒரு வாக்குச் சீட்டில், ‘ரூ.500 தராததால் யாருக்கும் தான் வாக்களிக்கவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. முகவர்களிடம் காண்பிக்கப்பட்ட பின்னர் அந்த வாக்கு சீட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

  • Share this:
    நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அப்போது, ஒரு வாக்குச் சீட்டில் “ரூ.500 தராததால் யாருக்கும் வாக்கு போடவில்லை என்று வாக்காளர் ஒருவர் எழுதியிருந்தது தெரியவந்தது.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் ரோஸ்மேரி கல்லூரியில் எண்ணப்பட்டன. ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குகளை ஊழியர்கள் எண்ணிக்கொண்டிருந்தப்போது, ஒரு வாக்குச் சீட்டில், ‘ரூ.500 தராததால் யாருக்கும் தான் வாக்களிக்கவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. முகவர்களிடம் காண்பிக்கப்பட்ட பின்னர் அந்த வாக்கு சீட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒருசிலர் வாக்களித்திருந்தனர். அந்த ஓட்டுக்களும் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. வாக்குச் சீட்டில்  வாக்காளர் ஒருவர் தனது பெயரை எழுதி கையெழுத்திட்டிருந்தார். அதுவும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    ஓட்டுப்பெட்டியை உடைத்த அதிகாரிகள்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுரில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குகள் பரமக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டன.  முன்னதாக, தபால் வாக்குகள் எண்ண ஊழியர்கள் ஆயத்தமாகினர். அப்போதுதான், தபால் வாக்குகள் உள்ள பெட்டியின் சாவி தொலைந்துபோனது தெரியவந்தது.  தேடி பார்த்தும் சாவி கிடைக்காததால்  தபால் வாக்கு இருந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு, அதன்பின்னர் வாக்குகள் என்னப்பட்டன.

    இதையும் படிங்க: கிணற்றில் தள்ளி விட்டார்களே படுபாவிகள்... தரையில் உருண்டு அழுத ’கிணறு சின்னம்’ வேட்பாளர்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: