கலைஞர் மீது ஆணையாக முதல்வரை கொச்சையாக பேசவில்லை: ஆ.ராசா

கலைஞர் மீது ஆணையாக முதல்வரை கொச்சையாக பேசவில்லை: ஆ.ராசா

ஆ.ராசா

கலைஞர் மீது ஆணையாக முதல்வர் பழனிசாமி குறித்து கொச்சையாக பேசவில்லை என்று கூடலூரில் ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.

 • Share this:
  எடப்பாடி பழனிசாமி நேர்வழியில் ஆட்சிக்கு வந்தவர் அல்ல, குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தவர் என்பதற்காக கூறிய கருத்தை திரித்து , பிரித்து எடப்பாடி பழனிசாமியின் தாயை கொச்சைப்படுத்தியதாக கூறும் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ஆ.ராசா கூடலூரில் விளக்கம் அளித்தார்..

  கூடலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காசி லிங்கத்தை ஆதரித்து கூடலூர் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார் ஆ.ராசா.  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான  ஆ.ராசா அப்போது பேசுகையில் , "தமிழகத்திலுள்ள பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மு க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி என செய்திகளை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,  மு. க. ஸ்டாலின் என்பவர் சிறுவயதில் மிசாவில் சிறை சென்று படிப்படியாக கட்சியில் வளர்ந்து இன்று தலைவராகவும், அதைப்போல் அரசுப்பணியில் மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் நாளை முதல்வர் என்று அனுபவசாலியாகத் திகழ்வதாகவும், எடப்பாடி பழனிசாமி நேர் வழியில் முதல்வர் ஆகாமல் குறுக்கு வழியில் முதல்வர் ஆனதாக தான் கூறிய அரசியல் கருத்தை சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திரித்து, பிரித்து ராசா வாகிய நான் எடப்பாடி பழனிசாமி பிறப்பு மற்றும் அவரது தாயாரை குறித்து கொச்சைப்படுத்தி பேசியதாக பரப்பி வருகின்றனர் . ஆனால் நிச்சயமாகவும்,  சத்தியமாக, கலைஞர் மீது ஆணையாக தான் பேசவில்லை என்றார்.  இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள்,  தோட்டத் தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • ஜார்ஜ் வில்லியம்ஸ், ஊட்டி செய்தியாளர்

  Published by:Arun
  First published: