தமிழகத்தில் கங்கை நதி பாய்கிறதா? திமுக எம்பி கேலி

திமுக எம்.பி வில்சன்

புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என்று திமுக எம்.பி வில்சன் கேலியாக ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என  திமுக எம்.பி வில்சன் கேலியாக ட்வீட் செய்துள்ளார்.

  மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்திலிருந்து பெறப்பட்ட பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்) எதற்காக செலவிடப்படுகிறது என்று திமுக எம்.பி வில்சன் கேள்வி எழுப்பி இருந்தார்.

  இதற்கு மத்திய அமைச்சகம் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கடந்த 3 ஆண்டுகளாக சமூக பொறுப்பு நிதியிலிருந்து 52 லட்சம் ரூபாய் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : ஆர்.எஸ்.எஸ் தலைவருக்காக சாலையை சீரமைக்க உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் விடுவிப்பு

  மத்திய அமைச்சகத்தின் பதிலை திமுக எம்.பி வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், தமிழகத்தில் கார்பொரேட் சமூக பொறுப்பு நிதி(CSR)நிதி ஒதுக்கீடு குறித்த எனது கேள்விக்கு நிதியின் ஒரு பகுதி சுத்தமான கங்கை நிதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என்றுள்ளார். மேலும் சுமார் 915கோடி 2019-2020 ல் தமிழகத்தில் ஏப்படி செலவிடப்பட்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றுள்ளார்.  பெரு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் சமூக பொறுப்பு நிதி அந்த நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியில் சமூக நலன் மற்றும் சுற்றுச்சுழலை மேம்படுத்த செலவிடப்பட்டு வந்தது.

  Also Read : முதல்வன் பட பாணியில் ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை... நிர்வாகிகள் கலக்கம்

  இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் இந்த நிதி பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டுமென மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழகத்தில் இருந்த பெறப்பட்ட சமூக பொறுப்பு நிதி கங்கை நதியை தூய்மைப்படுத்த செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: