Home /News /tamil-nadu /

கொரோனாவால் வெளியே வரவில்லை.. அனைத்து மாவட்டங்களுக்கும் வெற்றி விழாவுக்கு நேரடியாக வருவேன்: மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் வெளியே வரவில்லை.. அனைத்து மாவட்டங்களுக்கும் வெற்றி விழாவுக்கு நேரடியாக வருவேன்: மு.க.ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் இதயப்பூர்வமான நன்றிகளை, பாராட்டுதல்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் இதயப்பூர்வமான நன்றிகளை, பாராட்டுதல்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் இதயப்பூர்வமான நன்றிகளை, பாராட்டுதல்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

    கொரோனா விதிமுறைகள் காரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரடியாக வரவில்லை என்றும், அனைத்து மாவட்டங்களுக்கும் வெற்றி விழாவுக்கு நேரடியாக வருவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று (20-02-2022), சென்னை - அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற, கழகத் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை - திருமதி. தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் கலை கதிரவன் - சந்தியா பிரசாத் இணையரின் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்தார். 


    பின்னர் அவர் உரையாற்றியதாவது, நாளை மறுநாள், நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    Also Read: சட்டையை கழட்டு.. கள்ள ஓட்டுபோட வந்த நபரை அரை நிர்வாணப்படுத்திய ஜெயக்குமார்

    அந்த வெற்றிக்கு இடையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். இங்கே அண்ணன் துரைமுருகன் உள்ளிட்ட சிலர் பேசுகிறபோது, அவர் அதிகம் பேசமாட்டார் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். என்னைப் போன்றுதான் அவரும் அதிகம் பேசமாட்டார். நானும் அதிகம் பேசமாட்டேன்.

    இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலிக் காட்சியில் நான் பேசி முடித்துவிட்டேன். மக்களைச் சந்திக்க வருவதற்கு தைரியம் இல்லை என்று என்னைப்பற்றி சிலர் பேசினார்கள். என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்க தைரியம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.

    எதற்காக நான் காணொலிக் காட்சியின் மூலமாக அந்தப் பிரச்சாரத்தை நடத்தினேன் என்று கேட்டால், கொரோனா காலமாக இருக்கின்ற காரணத்தால், அந்தத் தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருக்கின்ற காரணத்தால்தான், நான் நேரடியாகச் செல்லவில்லை.

    அதே நேரத்தில் நான் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் சொன்னேன், தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கின்ற போது, நிச்சயமாக உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன்.

    ஏன் வரவில்லை என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, “மழைக்காலத்தில் நான் வெள்ளப் பகுதிகளுக்கு சென்றபோது, ஏனப்பா இப்போது வருகிறாய், உடம்பை ஏனப்பா கெடுத்துக் கொள்கிறாய்” என்று அக்கறையோடு கேட்கும் நிலையில்தான் இன்றைக்கு மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    எனவே தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் இதயப்பூர்வமான நன்றிகளை, பாராட்டுதல்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: DMK, MK Stalin

    அடுத்த செய்தி