• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசினேனா? அண்ணாமலை விளக்கம்

ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசினேனா? அண்ணாமலை விளக்கம்

ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசினேனா? அண்ணாமலை விளக்கம்

ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசினேனா? அண்ணாமலை விளக்கம்

அடுத்த 6 மாதத்துக்குள் இந்த ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம், கையிலெடுக்கலாம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

  • Share this:
    தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அண்மையில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நேற்று பதவியேற்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையொட்டி கோவையிலிருந்து வாகன யாத்திரையாக வந்த அண்ணாமலைக்கு, வரவேற்பு அளிக்கப்படும் கூட்டங்களில் அவர் பேசி வந்தார். அப்படி, திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்ட கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, இந்த ஊடகங்களை நீங்கள் மறந்துவிடுங்கள். நம்மைப் பற்றி பொய்யாகச் செய்தி போடுகிறார்கள். என்ன செய்யலாம் என்பதையெல்லாம் மறந்துவிடுங்கள். அடுத்த 6 மாதத்துக்குள் இந்த ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம், கையிலெடுக்கலாம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

    ஆகவே, தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. முன்னர் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகியுள்ளார். அனைத்து ஊடகங்களும் அவருக்குக் கீழ்தான் வரப்போகின்றன என்று பேசினார்.

    Also read:  முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா? ஜே.பி.நட்டாவை சந்தித்த எடியூரப்பா விளக்கம்..

    இதையடுத்து, ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசுவதா? என அண்ணாமலையில் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தன.

    இந்நிலையில், கமலாலயத்தில் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, "நான் ஊடகம் குறித்துப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. நான் புதிய தொழில்நுட்ப விதிகள் குறித்துப் பேசினேன்.

    இந்த விதிகள், சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு 'செக்'காக அமையும். பாரம்பரிய ஊடகங்கள் குறித்து நான் சொல்லவில்லை. தமிழக, இந்திய ஊடகங்கள் மீது மிகப்பெரிய மதிப்பை பாஜக வைத்திருக்கிறது. மோடி மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: