• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆன்லைனில் உணவு: சாலை விதிகளை மீறுகிறார்களா டெலிவரி பாய்கள்?

ஆன்லைனில் உணவு: சாலை விதிகளை மீறுகிறார்களா டெலிவரி பாய்கள்?

மாதிரி படம்

மாதிரி படம்

'ஆன்லைன் ஷாப்பிங்' என்று ஒன்று வந்த பின், எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து ஆடைகள் தொடங்கி, இப்போது உணவை கூட ஆன்லைனில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை போன்ற பெரு நகரங்களில் உணவை ஆன்லைனில் வாங்கும் கலாசாரம் பெருகி வருகிறது. அப்படி, வாங்கும் உணவை டெலிவரி செய்யும் பணியாளர்களில் 70 சதவீதம் பேர் சாலை விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இன்றைக்கு மக்களின் அன்றாட தேவைகள் கூட நவீனமயமாகி விட்டன. அதிலும், 'ஆன்லைன் ஷாப்பிங்' என்று ஒன்று வந்த பின், எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து ஆடைகள் தொடங்கி, இப்போது உணவை கூட ஆன்லைனில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தேவையான உணவை ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்து விடுகிறார்கள். அப்படி, டெலிவரி செய்வதற்கு 'டெலிவரி பாய்ஸ்' என்ற பெயரில் ஏராளமான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆர்டர் செய்தவர்களுக்கு உணவை வேகமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே 'டெலிவரி பாய்ஸ்' கள் சாலை விதிகளை மீறுவதாக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, டெலிவரி பாய்ஸ்களிடம் கேட்டபோது, வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற வேகத்தை தவிர, சாலை விதிகளை கடைபிடித்தே பணியாற்றுவதாக கூறுகின்றனர்.

இது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, ஆன்லைன் உணவு விற்பனை தற்போது அதிகரித்துள்ள நிலையில், அவற்றை டெலிவரி செய்யும் பணியாளர்கள் சாலை விதிகளை மீறுவது உண்மைதான் என்றும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கின்றனர்.

இருக்கும் இடத்திலிருந்தே உணவுகளை வாங்கி உண்ணும் வசதி, நல்ல வரவேற்பை பெற்றாலும், மற்றவர்களுக்கு பாதிப்புகள் இல்லாமல் அதன் பணிகள் தொடர்ந்தால் அனைவருக்கும் நன்மை என்பதே அனைவரின் கருத்து.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: