Home /News /tamil-nadu /

திமுகவும், அதிமுகவும் முதலில் மதுக்கடைகளை மூடுவதற்கு பொது விவாதம் நடத்த தயாரா? அன்புமணி கேள்வி

திமுகவும், அதிமுகவும் முதலில் மதுக்கடைகளை மூடுவதற்கு பொது விவாதம் நடத்த தயாரா? அன்புமணி கேள்வி

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி பழி சுமத்தி வருகிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக பொது விவாதத்திற்கு திமுக அதிமுக தயாரா என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை மாங்கொல்லையில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிக தேர்தலுக்கான அக்கட்சியின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டார்.

    இதன் பின்னர் கூட்டத்தில் பேசிய அன்புமணி, 55 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழகம் தேக்க நிலையை அடைந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு புதிய திட்டங்கள் கொண்டு வராமல் இரு கட்சிகளும் அரைத்த மாவையே அரைத்து கொண்டு வருகின்றனர்.

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம் விரைவில் அறிவிப்பு: முதல்வர் தகவல்

    கடந்த 15 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டும், முன்னேற்றம் இல்லை. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி பழி சுமத்தி வருகிறது.

    நீட் தேர்வு முதலில் கொண்டுவரப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். அப்போது திமுக அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்தும் நீட் தேர்வை தடுக்க தவறி விட்டது. அவர்கள் ஆட்சிக் காலத்திற்கு பின்னர் நீட் தேர்வு தொடர்வதற்குஎ= பாஜக மற்றும் அதிமுக காரணம் ஆகி விட்டது.

    நீட் விவகாரத்தில் பொது விவாதத்திற்கு தயாரா என கேட்டு மாறிமாறி சவால் விடும் திமுகவும், அதிமுகவும் முதலில் மதுக்கடைகளை மூடுவதற்கு பொது விவாதம் நடத்த தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Anbumani ramadoss, PMK

    அடுத்த செய்தி