Home /News /tamil-nadu /

புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு... அங்கன்வாடி உணவு காரணமா? - அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு

புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு... அங்கன்வாடி உணவு காரணமா? - அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு

அமைச்சர் ரகுபதி ஆய்வு

அமைச்சர் ரகுபதி ஆய்வு

Pudukkottai : புதுக்கோட்டையில் அங்கன்வாடி உணவை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே லேசான வயிற்று வலி வயிற்றுப்போக்கு என அமைச்சர் தகவல்.

    புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை அருகே உள்ள தொண்டைமான் நகர் அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட நிலையில், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் நேரில் பார்வையிட்டு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அங்கன்வாடியில் மதிய உணவாக கலவை சாதம் வழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் உணவு வாங்கிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்படி அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட எந்த குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படவில்லை. உணவை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே லேசான வயிற்று வலி வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. அவர்களுக்கு அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட உணவு நாள்தான் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    Must Read : உதயநிதி அமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ரெஸ்பான்ஸ்

    அந்த இரண்டு குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட 22 குழந்தைகளும் தற்பொழுது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    செய்தியாளர் -ர.ரியாஸ், புதுக்கோட்டை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Children, Pudukkottai

    அடுத்த செய்தி