Home /News /tamil-nadu /

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கிறார் எம்.எஸ்.தோனி!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கிறார் எம்.எஸ்.தோனி!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கிறார் தோனி!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கிறார் தோனி!

செஸ் ஒலிம்பியாடின் தொடக்க விழாவை விட நிறைவு விழா பெரிதாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும் என உதயநிதி ஸ்டாலினும் குறிப்பிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வரும் 9ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்துகொள்கிறார்.

    சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த தொடக்க விழாவில் நடிகர் கமல் ஹாசன் குரலில், தமிழர் வரலாறு குறித்த ஆடியோ பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்றவாறு கலைஞர்கள் பெர்ஃபார்ம் செய்தனர். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு சதுரங்க கீதம் பாடலையும் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 186 நாடுகளில் இருந்து தமிழகம் வருகை புரிந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    தொடக்க விழாவைப் போலவே, செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியும் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் வருகிற 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. செஸ் ஒலிம்பியாடின் தொடக்க விழாவை விட நிறைவு விழா பெரிதாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும் என உதயநிதி ஸ்டாலினும் குறிப்பிட்டிருந்தார்.



    இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் வரும் 9ம் தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், நிறைவு விழா அழைப்பிதழில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது, நாளை பிரமாண்ட திருவிழாவுடன் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chess Olympiad 2022, MS Dhoni

    அடுத்த செய்தி