அத்திவரதரை தரிசனம் செய்ய இரவு 8 மணிவரை பக்தர்களுக்கு அனுமதி!

ஜூலை 11-ம் தேதி ஆனி கருடசேவை மற்றும் ஜூலை 15-ம் தேதி ஆடி கருட சேவையை முன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

news18
Updated: July 6, 2019, 7:42 AM IST
அத்திவரதரை தரிசனம் செய்ய இரவு 8 மணிவரை பக்தர்களுக்கு அனுமதி!
அத்திவரதர்
news18
Updated: July 6, 2019, 7:42 AM IST
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் இன்று முதல் காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் திருவிழாவின் 5-ம் நாளில் 92,000 பேர் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 5 நாட்களில் மொத்தமாக 4,35,000 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு வீல் சேரில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 500 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டானது நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூலை 11-ம் தேதி ஆனி கருடசேவை மற்றும் ஜூலை 15-ம் தேதி ஆடி கருட சேவையை முன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், இன்று தொடங்கி மற்ற நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை காணலாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also see...

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...