Home /News /tamil-nadu /

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம்

Thiruvarur District : இந்த தர்ணா போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு  நிறைவேற்றக் கோரி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் மாவட்ட தலைநகர்களில் நடைபெற்றது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் கடந்த ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்து அவரை உடனடியாக பணி ஓய்வில் செல்ல ஆணை வழங்க வேண்டும்,வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலர்களுக்கும் வழங்கி உரிய அரசாணை வெளியிட வேண்டும்,



    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்ய கோருதல் மற்றும் முழு சுகாதார திட்ட வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காலமுறை ஊதியம்,பணி வரன்முறை செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.



    இதில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.மேலும் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் செந்தில்,முன்னாள் மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன் ஆகியோர் உரையாற்றினர். இந்த தர்ணா போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : செந்தில்குமரன், திருவாரூர் 
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Thiruvarur

    அடுத்த செய்தி