பெண்களுக்கு பாலியல் தொல்லை... ராங்கால் மைனர்கள் சிக்கியது எப்படி?

Youtube Video

தருமபுரி மாவட்டத்தில் முகநூல் ,வாட்சப் மூலமாக பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இருவரை பாதிக்கப்பட்டவர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 • Share this:
  தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்தவர் அந்த பெண் .அவரது செல்போன் எண்ணிற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய ஆண் ஒரு பெயரை சொல்லி அழைக்க, அந்த பெண்ணோ தவறான அழைப்பு என்று துண்டித்துள்ளார். ஆனால் அத்துடன் இல்லாமல் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்துள்ளது. அத்துடன் இரவு நேரத்தில் பெண்ணின் வாட்சப்பிற்கு ஆபாச மெசேஜ்களும் வர தொடங்கியுள்ளது .

  இந்த விவகாரத்தை அந்த பெண் அவரது கணவருக்கு சொல்லியுள்ளார் . பெண்ணின் கணவர் அந்த எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார், ஆனால் மறு முனையில் பேசியவர் அருவருக்க தக்கவகையில் பேசி அழைப்பை துண்டித்துள்ளார். எப்படியாவது ராங்கால் நபரை பிடிக்க திட்டம் போட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட பெண்ணும் ,அவரது கணவரும்.

  வேறு ஒரு நண்பரின் போனில் இருந்து அந்த ராங்கால் நபருக்கு ஒரு பெண் பேசுவது போன்று பேசிய போது ராங்கால் நபர் சிக்கினார். ராங்கால் நபர் தருமபுரியை சேர்ந்த ரவி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து பேசி ரவியின் வீட்டு விலாசவீட்டிற்கு சென்று ரவியை பிடித்துள்ளனர். சிறப்பான கவனிப்பு செய்தவுடன் ரவி உண்மைகளை சொல்லியுள்ளான்.  மேலும் ரவியின் செல்போனை ஆய்வு செய்த போது அவரும் அவரது நண்பர் நரசிம்மனும் சேர்ந்து பல பெண்களுக்கு இது போன்று தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. குத்துமதிப்பாக ஒரு எண்ணிற்கு அழைக்கும் இவர்கள் பெண்ணாக இருந்தால் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளனர் . மேலும் தருமபுரி வாட்சப் குழுக்கள் ,மற்றும் முகநூல் பக்கத்தில் பெண் பெயரில் இருக்கும் ஐடிகளில் போன் நம்பர்களை எடுத்து பெண்களுக்கு ஆபாச தொந்தரவு செய்துள்ளதும் தெரியவந்தது

  இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தருமபுரி நகர காவல் நிலையத்தில் ரவி மீது புகார் கொடுத்தார் . புகாரின் பெயரில் ரவி மற்றும் அவரது நண்பர் நரசிம்மன் இருவரையும் காவல்துறையினர் பிடித்து பெண்களுக்கு ஆபாச தொந்தரவு கொடுத்தல் ,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: