தர்மபுரி: வீட்டின் முன்பு டிராக்டரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறு... ஓட்டுநர் ஓடஓட வெட்டிக்கொலை

தர்மபுரி: வீட்டின் முன்பு டிராக்டரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறு... ஓட்டுநர் ஓடஓட வெட்டிக்கொலை

மாதிரிப்படம்

தர்மபுரி மாவட்டத்தில் வீட்டின் முன் டிராக்டரை நிறுத்தியதற்காக ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் ஒருவரை ஓடஓட வெட்டிக்கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கானூர் கொட்டாயைச் சேர்ந்தவர் 45 வயதான மாதையன். விவசாய வேலை செய்துவரும் இவர், வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டரும் வைத்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு விவசாயக் கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல, அருகே உள்ள அத்தி முட்லு கிராமத்திற்குச் சென்றுள்ளார். ஆட்களை டிராக்டரில் ஏற்ற தாமதமாகும் என்பதால் டிராக்டரை நாகராஜ் என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தியுள்ளார்.

  ஆனால் டிராக்டரை உடனே எடுக்கச் சொல்லி நாகராஜ், மாதையனைக் கண்டித்துள்ளார். அதற்கு நாகராஜிடம் சிறிது நேரத்தில் எடுப்பதாகச் சொல்லியுள்ளார். உடனே வாகனத்தை எடுக்கச் சொல்லி நாகராஜ் கண்டிப்பாக பேசவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்ற தள்ளுமுள்ளு சண்டையாக அது மாறியுள்ளது.

  இதைப் பார்த்த ஊர் மக்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை மாதையன் அத்திமுட்லு கிராமத்தில் உள்ள பால் கொள்முதல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த நாகராஜ் மீண்டும் மாதையனைப் பார்த்துள்ளார். இருவருக்கும் மீண்டும் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

  Also read: ‘சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 15 நாட்களில் 100 ரூபாய் உயர்த்தியிருப்பது பகற் கொள்ளையைவிட மோசமானது’ - திருமாவளவன் எம்.பி

  ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நாகராஜ் கொடு வாளை எடுத்துக் கொண்டு மாதயனை வெட்ட முயன்றுள்ளார். ஆனால் மாதையன் தப்பி ஓடவே, துரத்திச் சென்ற நாகராஜ் சிறிது தூரத்தில் மாதையனை மடக்கிப்பிடித்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கழுத்துப் பகுதிகளில் படுகாயமடைந்த மாதையன் சம்பவ இடத்திலையே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சிறிது நேரத்தில் மாதையன் துடிதுடித்து உயிரிழந்தார்.

  இச்சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் கொடுத்த புகாரையடுத்து, மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். டிராக்டர் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒட்டுநர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: