மழைநீரை சேமிக்க ’யூடியூப்’ பார்த்து ஐடியாவை செயல்படுத்திய தருமபுரி காவலர்கள்!

ஆயுதப்படை மைதானத்தை ஆய்வு செய்த தருமபுரி ஆட்சியர் மலர்விழி , காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, இதுபோன்ற திட்டங்களை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மழைநீரை சேமிக்க ’யூடியூப்’ பார்த்து ஐடியாவை செயல்படுத்திய தருமபுரி காவலர்கள்!
மழைநீர் சேகரிப்பு
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:28 PM IST
  • Share this:
தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கவும், தண்ணீரைச் சேமிப்பது குறித்தும் தங்கள் தண்ணீர் பிரச்னையை தாங்களே தீர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட தருமபுரி காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியில் ஆயுதப்படை மைதானம் 36 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 300 குடியிருப்புகள் உள்ளன. மேலும், அலுவலகங்கள், பயிற்சிப் பள்ளியும் செயல்படுகின்றன. இதுபோக சுமார் 25 ஏக்கர் காலி இடம் உள்ளது.

இந்த மைதானத்தில், மொத்தம் 6 ஆழ்துளைக் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறு அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில், இங்குள்ள கிணறு நீரின்றி வற்றிப்போனது. இதனால், காவலர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இந்த சூழலில், தண்ணீர் பிரச்னையை தீர்க்க என்ன வழி என்று சிந்திக்க தொடங்கிய காவலர்கள் யூடியூப்பை பார்த்து மழை நீரைச் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

அதன்படி 25 ஏக்கர் காலி இடத்தில் மழை நீர் செல்லும் பாதையைக் கண்டறிந்து 3 இடங்களில் சுமார் 5 அடி உயரம் கரையை ஏற்படுத்தி குளம் அமைத்தனர்.

இதில் கடந்த 2 நாட்களில் பெய்த மழையால் அந்த குளத்தில் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதன் மூலம் வறண்டு போன ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் புகுந்து நிலத்தடி நீர்மட்டம் 4 அடி வரை உயர்ந்துள்ளது.இதனிடையே ஆயுதப்படை மைதானத்தை ஆய்வு செய்த தருமபுரி ஆட்சியர் மலர்விழி , காவலர்களுக்குப் பாராட்டு தெரிவித்ததோடு, இதுபோன்ற திட்டங்களை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அனைவரும் இது போன்று சொந்த முயற்சியில் மழை நீரைச் சேமிக்க முன்வந்தால் நமது பிரச்னையும் தீரும். வருங்கால சந்ததியினருக்கும் நீர் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கவும், தண்ணீரைச் சேமிப்பது குறித்தும் "மிஷன் பானி" என்ற தலைப்பில் நியூஸ் 18 தொலைக்காட்சி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 Also Watch:  வேண்டாம் என்று பெயரிடப்பட்ட பெண்ணின் சாதனை 

First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading