தருமபுரியில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவரின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

தருமபுரியில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவரின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

தருமபுரி மாணவர் ஆதித்யாவின் உடலை வாங்க மறுத்து, அவரது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • Share this:
  தருமபுரியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

  தமிழகத்தில் நீட் தேர்வு எழுதவிருந்த 3 மாணவர்கள் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதில், தருமபுரி மாணவர் ஆதித்யாவின் உடலை வாங்க மறுத்து, அவரது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பிரேத பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறி, அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர் ஒருவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

  இந்த நிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மாணவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் தொகை வழங்குவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.  இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து மாணவரின் உடல், சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


  Published by:Vijay R
  First published: