சாலை வசதியற்ற மலைக்கிராமம்! நியூஸ்18 செய்திக்கு பதிலளித்த தருமபுரி எம்.பி

மருத்துவமனைக்கு செல்லவேண்டுமென்றால், மூன்று மலைகளைத் தாண்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

news18
Updated: July 5, 2019, 10:02 PM IST
சாலை வசதியற்ற மலைக்கிராமம்! நியூஸ்18 செய்திக்கு பதிலளித்த தருமபுரி எம்.பி
எம்.பி செந்தில் குமார்
news18
Updated: July 5, 2019, 10:02 PM IST
தருமபுரி மாவட்டத்திலுள் சாலை வசதியில்லாமல் தவிக்கும் மலைக்கிராமம் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி வெளியான நிலையில், அந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அத்தொகுதி எம்.பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ளது அரசநத்தம் மலைக் கிராமம். அந்த மலைக்கிராமத்துக்கு சாலை வசதி சுத்தமாக இல்லை. மருத்துவமனைக்கு செல்லவேண்டுமென்றால், மூன்று மலைகளைத் தாண்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அந்த கிராமத்தில் பத்து வகுப்பு வரைக்கு மட்டும் பள்ளி உள்ளது. அதற்கு மேல், படிக்க வேண்டுமென்றால் 10 கி.மீ தூரம் நடந்து செல்லவேண்டிய அவசியம் உள்ளது. அதனால், பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு, திருமணம் செய்துவைக்க வேண்டிய சூழல் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காதச் சூழல் உள்ளதால், இளைஞர்கள் செம்மரம் கடத்தும் வேலைக்குச் செல்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சியில் விரிவான செய்தித் தொகுப்பு வெளியானது. அந்தச் செய்தியை ட்விட்டரில் பதிலளித்த தருமபுரி தொகுதி எம்.பி செந்தில் குமார், ‘இந்தப் பிரச்னையை மிகுந்த முக்கியத்துவம் கொண்ட பிரச்னையாக எடுத்துள்ளேன். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு சில தீர்வுகளை கண்டுள்ளேன். இந்தச் சூழல் விரைவில் சரி செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...