முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ₹3.47 கோடி பணம் பறிமுதல்

அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ₹3.47 கோடி பணம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

  • 1-MIN READ
  • Last Updated :

திருவண்ணாமலையிலிருந்து அரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில், உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், அரூர் அருகேயுள்ள பயர்நாயக்கன்பட்டி கூட்ரோடு பகுதியில் அந்த பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். பேருந்தின் இருக்கைகளுக்கு கீழே, வைக்கப்பட்டிருந்த 7 பைகளை பறக்கும் படையினர் சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக சுமார் 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்தில் இருந்த யாரும் பணத்திற்கு உரிமை கோராத நிலையில், அந்த பைகளுக்கு அருகே அமர்ந்திருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு ஊழியர் செல்வராஜிடம் விசாரணை நடத்தினர். ஆனால், தனக்கும் அந்த பணத்திற்கும் தொடர்பில்லை என செல்வராஜ் கூறியதை அடுத்து, அவரை விடுவித்த பறக்கும் படை அதிகாரிகள், பையை மேற்கொண்டு சோதனை செய்தனர். அதில், ரமேஷ் என்பவர் பெயரில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி கணக்குப் புத்தகம் ஒன்று இருந்ததை கண்ட அதிகாரிகள், பணத்திற்கு உரிமையாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.பி.எல் குறித்த தகவல்கள்!

First published:

Tags: Dharmapuri, Dharmapuri S22p10, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019