Home /News /tamil-nadu /

தங்ககட்டி வியாபாரம் லாபம் அள்ளலாம்.. இளம்பெண்ணிடம் ஆசையைதூண்டி 5 லட்சம் அபேஸ் - மோசடி இளைஞர் கைது

தங்ககட்டி வியாபாரம் லாபம் அள்ளலாம்.. இளம்பெண்ணிடம் ஆசையைதூண்டி 5 லட்சம் அபேஸ் - மோசடி இளைஞர் கைது

இளம்பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது

இளம்பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது

Dharmapuri Crime News: வெங்கடேசன் கொடுத்த தங்க கட்டிகளை சோதனை செய்ததில் வெங்கடேசன் கொடுத்த அரை கிலோ தங்க கட்டிகளும் போலி என தெரியவந்தது

    தருமபுரியில் போலி நகையை கொடுத்து பெண்ணை ஏமாற்றி 5 லட்சம் பெற்று மோசடி செய்த வாலிபரை காவல் துறையினரால் கைது. அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மற்றும் போலி நகைகள் பறிமுதல் செய்யபட்டது. 

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் தனசேகரன் அவரது மனைவி அனிதா. இவர் தருமபுரி நகரில் ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனிதாவிற்கு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது தான் தங்ககட்டிகள் வியாபாரம் செய்து வருவதாகவும், தாங்கள் விரும்பினால் இருவரும் சேர்ந்து தங்க வியாபாரம் செய்யலாம் என்றும், அதில் நல்ல லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி அனிதாவிடம் 2 கிராம் தங்க துண்டுகளை கொடுத்துள்ளார்.

    Also Read: ஆபாச வீடியோ.. இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்.. திமுக நிர்வாகி, பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

    அப்போது வெங்கடேசன் கொடுத்த தங்க கட்டிகளை பரிசோதித்த போது அது அசல் தங்கம் என்பது தெரிய வந்தது.   அதனையடுத்து சிறுது நாட்கள் கழித்து அனிதாவை தொடர்பு கொண்ட வெங்கடேசன் தன்னிடம்  தங்க கட்டிகள் உள்ளது என்றும் அதற்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு அனிதா தன்னிடம் 10 லட்சம் ரூபாய் இல்லை. 5 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது என கூறியதையடுத்து வெங்கடேசன் அதற்கு அரை கிலோ தங்க கட்டிகள் தருவதாக கூறி அனிதாவை தருமபுரியை அடுத்த சோகத்தூர் ஏரிக்கரை அருகே வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியதையடுத்து தன்னிடம் இருந்த ரூ 5 லட்சம் வெங்கடேசனிடம் கொடுத்து தங்க கட்டிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

    பின்னர் வெங்கடேசன் கொடுத்த தங்க கட்டிகளை சோதனை செய்ததில் வெங்கடேசன் கொடுத்த அரை கிலோ தங்க கட்டிகளும் போலி என தெரியவந்தது. அதனையடுத்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் போலி நகை கொடுத்து  5 லட்சம் ரூபாயை ஏமாற்றிய வெங்கடேசன் மீது அனிதா புகார் கொடுத்ததையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த வெங்கடேசனை தேடிவந்த நிலையில் இன்று தருமபுரி திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்து அவரிடமிருந்து ரூ.5 லட்சம், 27 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ போலி தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    Also Read: காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

    தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளது தெரியவந்தது. தருமபுரி நகர காவல் நிலையம் மற்றும் அதியமான் கோட்டை காவல் நிலையம் மற்றும் மதிகோன் பாளையம் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து இருந்து திருடப்பட்ட 27 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ஆர்.சுகுமாா் (தருமபுரி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cheating, Cheating case, Crime News, Dharmapuri, Gold, Gold Biscuit, Jewels

    அடுத்த செய்தி