Home /News /tamil-nadu /

மாடு பூட்டி செக்கில் எண்ணெய் பிழியறாங்க.. பாரம்பரிய தொழில்நுட்பத்தில் அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்.

மாடு பூட்டி செக்கில் எண்ணெய் பிழியறாங்க.. பாரம்பரிய தொழில்நுட்பத்தில் அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்.

செக்கில் மாடுகள் பயன்பாடு

செக்கில் மாடுகள் பயன்பாடு

Traditional wood Pressed oil: இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும்போது, அதன் வேகத்தால் எண்ணெய் அதிகம் சூடாகிறது. அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்துகள் குறைந்துவிடும். அதனால் தான், ‘ஒரு தடவை பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது’ என்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    தருமபுரியில், பாரம்பரிய முறைப்படி செக்கில் மாடு பூட்டி எண்ணெய் பிழியும் தொழில்நுட்பத்தை உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க துவங்கி உள்ளனர். 'பாக்கெட்' செய்யப்பட்ட எண்ணெயை பயன்படுத்தி வந்த மக்களிடம், மாற்றம் ஏற்பட்டு வருகிறது. செக்கில் பிழிந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
    இதற்காக, ஆங்காங்கே மரச்செக்கு எண்ணெய் நிறுவனங்கள் துவங்கப்பட்டு வருகின்றன. அதில், பாரம்பரிய முறைப்படி செக்கில் மாடு கட்டி எண்ணெய் தயாரிப்பு தொழில்நுட்பத்தை உற்பத்தியாளர்கள் மீண்டும் கடைபிடிக்க துவங்கியுள்ளனர்.

    தருமபுரி - கடத்தூர்  ரோட்டில், தருமபுரி மாவட்டம் மணியம்பாடி கிராமத்தை  சேர்ந்த அருண் மற்றும் அவருடைய குடும்பத்தார் பழமையான முறையில் செக்கில் எண்ணெய் தயாரித்து வருகிறார். அவர்கள் கூறியதாவது: "பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளேன் சென்னையில் தனியார் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்றால் பொது முடக்கம் ஏற்பட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தபொழுது எனது சொந்த கிராமத்திற்கு வந்து தங்களுடைய நிலத்தில் ஏதாவது ஒரு நல்ல தொழில் செய்ய எண்ணினேன்.

    அந்தத் தொழிலால் மக்களுக்கு மிகவும்  பயனுள்ளதாகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு நல்ல வேலையை செய்ய எண்ணி, மரச்செக்கு தொழிலில் எனது குடும்பத்தாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். தற்போது, செக்கு எண்ணெய் மவுசு துவங்கியுள்ளதால், உற்பத்தியை துவங்கியுள்ளோம்.

    செக்கில் மாடுகள் பயன்பாடு


    தருமபுரி மாவட்டத்தில் முதல் முதலில் மாடு பூட்டி மரச்செக்கு  பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தயாரிப்பு தொழில் துவங்கப்பட்டுள்ளது. ஆறு அடி கொண்டது கல் நடப்பட்டு, வாகை மரம் செக்காக பயன்படுத்தப்படுகிறதுகடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. முதலில் மணப்பாறையில் இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு ஜோடி காங்கேயம் காளைகளை வாங்கி வந்து செக்கு இழுக்கப்பட்டு, எண்ணெய் பிழியப்படுகிறது. எண்ணெய் பக்குவம் வந்ததும், ஓரிலை துண்டு கொண்டு பிழிந்து எடுக்கப்படுகிறது.

    Also read:  ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அதிக மூடநம்பிக்கை கொண்டவர்கள் - ஜேம்ஸ் வசந்தன்

    ஒரு நாளுக்கு, 60 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யலாம். ஒரு லிட்டர் நல்லெண்ணெய், 360 ரூபாய்; தேங்காய் எண்ணெய், 290 ரூபாய்; கடலை எண்ணெய், 290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என, அவதிப்படும் மக்கள், தற்போது இயற்கை உணவு முறைக்கு மாறி வருகின்றனர்.. இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும்போது, அதன் வேகத்தால் எண்ணெய் அதிகம் சூடாகிறது. அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்துகள் குறைந்துவிடும். அதனால் தான், ‘ஒரு தடவை பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது’ என்கின்றனர்.

    மர செக்கை மாடுகள் மூலம் மெதுவாக இயக்குவதால், எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் எள்ளுடன் சேர்த்து அரைக்கப்படும் கருப்பட்டி, சமன் செய்துவிடும்.

    Also Read: Hijab தடை செய்வது குரானை தடைசெய்வதுபோல - இஸ்லாமிய தரப்பு மாணவிகள் நீதிமன்றத்தில் வாதம்

    இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால், பாக்கெட் எண்ணெய், பார்க்க பளிச்சென இருக்கும். கம்பெனிகள், தங்களுக்கு என நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கின்றனர். அதனால் தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கிறது. ஆனால், மரச்செக்கு எண்ணெய் நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடனும் ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

    இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தைக் கொடுக்கும். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்… அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது. இது ஒரு குடிசை தொழில் என்பதால், அரசு மானியம் வழங்கினால், மரச்செக்கு தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். நம் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை, அரசு முன் வந்து ஊக்குவிக்க வேண்டும். பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தயாரிப்பினை பார்த்து, ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு, தெரிவித்தார்.

    ஆர்.சுகுமாா் ( தருமபுரி ) 
    Published by:Arun
    First published:

    Tags: Dharmapuri

    அடுத்த செய்தி