Home /News /tamil-nadu /

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று : இயந்திர வாழ்வில் மறைந்து போகும் சிட்டுக் குருவியின் வாழ்விடங்கள்

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று : இயந்திர வாழ்வில் மறைந்து போகும் சிட்டுக் குருவியின் வாழ்விடங்கள்


உலக சிட்டுக்குருவிகள் தினம்

உலக சிட்டுக்குருவிகள் தினம்

World Sparrow Day 2022 : இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு நாம் அபூர்வமாக தேடும் பறவையாக மாறப்போகிறது. சுறுசுறுப்பு, இனிய ஓசை, இயல்பான வண்ணம் போன்றவற்றால் மனிதர்களை தன்வசப்படுத்திய சிட்டுக்குருவிகள் தற்போது அழிந்து வரும் உண்மையை நாம் அறியவேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்.

மேலும் படிக்கவும் ...
  உலகமயமாக்கல் எனும் சக்கரத்தின் கீழ் சிக்குண்ட விஷயங்களில் பறவை இனமும் ஒன்று. டி.டி.டி எனும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினால் பறவைகள் அழிந்து போகின்றன என்று சொல்லிய ரேச்சல் கார்சனின் 'மௌன வசந்தம்’ தொடங்கி, 'டைக்லோஃபினாக்’ எனும் கால்நடைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் மூலம் வல்லூறுகள் இறந்து போகின்றன என்று சொல்லும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தகவல் அறிக்கைகள் வரை பறவைகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதற்கான அறிகுறிகள் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

  அந்த வரிசையில் 'மொபைல் போன் டவர்’களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் மூலம் சிட்டுக்குருவிகள் அதிகமாக அழிந்து வருகின்றன என்று ஒரு செய்தி இன்றைக்கு மக்களுடையே அதிகம் விவாதிக்கப்படுகிறது. அது எந்த அளவு உண்மை என்பது தெரியாத நிலையில் இன்று  நாடு முழுவதிலும் 'உலக சிட்டுக்குருவிகள் தினம்’ அனுசரிக்கப்பட இருக்கிறது.

  சிட்டுக்குருவி என்ற இந்த ஒரு பறவை மட்டும்தான் மனிதர்களிடத்தில் இணக்கமாக இருக்கக் கூடியது. எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அதன் சுற்றுப்புறங்களில் குருவிகள் காணப்படும். சுமார் 10,000 வருடங்களாக இந்தப் பறவை இனம் இருந்து வருகிறது. சரியான உணவு கிடைக்காதது,  முட்டையிடுவதற்கான தகவமைப்பு உள்ள இடம் கிடைக்காதது, மொபைல் போன் டவர்களில் இருந்து வரும் நுண்ணிய கதிரியக்கம் போன்ற பல காரணங்களால் குருவிகள் அழிந்து வருகின்றன. உணவு சேகரிப்பதைக் கூட சிட்டுக்குருவிகள் சமாளித்துவிடக் கூடும். ஆனால் அவற்றின் இனப்பெருக்கம் தான் கேள்விக்குறி! குருவிகள் முட்டையிடுவதற்கான தகுந்த தகவமைப்பு உள்ள கூடுகளை இன்று எந்த வீடுகளிலும் நீங்கள் பார்த்துவிட முடியாது.

  இதையும் படியுங்கள் :  அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவி இனத்தை மீட்க பள்ளி மாணவர்களின் அபார முயற்சி

  அதற்கான முக்கியக் காரணம் மாறிவரும் கட்டிட வடிவமைப்புகள். மேலும் வயல்களில் கம்பு, சோளம், கேள்வரகு என சிறுதானியவகைகளை பயிரிடும் விவசாய நிலங்கள் கூட குறைந்து வருவது கூட ஒரு காரணம்.வெளிநாட்டு காதல் பறவைகள் என்ற போர்வையில் பல வன்ன குருவி இனங்களை நாம் வீட்டில்அலங்கரிக்கும் நோக்கில் வளர்த்து வருகிறோரம்.  ஆனால் நம்முடனே வாழ்ந்துவந்த சிட்டுக்குருவிகள் வாழ எந்த வழிவகைளையும் நாம் செய்ய மறந்துவிட்டோம். பூச்சிக்கொல்லிகள், மொபைல் டவர்கள் போன்ற பல காரணங்கள் குருவிகள் அழியக் காரணமாக இருக்கின்றன. சமீபத்தில், 'அன்லெட்டட் பெட்ரோல்’ மூலம் வெளிப்படும் கசடுகளால் பூமியில் உள்ள புழுக்கள் அழிந்து வருகின்றன.

  குருவிகளுக்கான முக்கிய உணவு புழுக்கள் என்பதால், அவை இல்லாமல் போவதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். தவிர, அவை முட்டையிடுவதற்கான கூடுகள் அமைக்கத்தகுந்த இடங்கள் இல்லாததால் இனப்பெருக்கமும் தடைபட்டுப் போகின்றன.  கிராமங்கள் நகரங்களை நோக்கி பயனிப்பதாலும், நாகரீகம் என்ற பெயரில் மண் வீடுகளையும், திண்னைகளையும், கூரை வீடுகளையும் ஏன் ஓட்டு வீடுகளையும் கூட நாம் இழந்து கான்கரீட் வீடுகளாக அதுவும் சதுர கணக்கில் ஒரு சதுர இடத்தையும் விட்டுவைக்காமல் வீடுகட்டி அதில் இயந்திரங்கள்போல வாழத் தொடங்கினோமோ அன்றே நம்முடன் வந்த உறவுகள், பறவைகள் குறிப்பாக சிட்டுக்குருவிகள் உள்ளிட்டவைகளை இழந்து வருகிறோம் என்பது உண்மை.

  இதையும் படியுங்கள் :  குற்றாலத்தில் குறைந்தது நீர்வரத்து... ஏமாற்றத்தோடு திரும்பும் சுற்றுலா பயணிகள்
   இயற்கையை மறந்து வாழும் நம்மில் ஏது இன்பம். இதற்கு மத்தியில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு காட்டுப்பகுதிகளில் அதிகஅளவில் ஆயிரகணக்கான சிட்டுக்குருவிகள் இன்றும் வாழ்ந்துவருகிறது. இந்த சிட்டுக்குருவிகளின் வாழ்விற்கு அப்பகுதி மக்கள் எந்த வித இடையூறும் செய்யாமல் இருக்கின்றனர் என்பது இந்த சிட்டுக்குருவிகள் தினத்தில் சற்று ஆறுதல்.


  செய்தியாளர் : ஆர்.சுகுமாா், தருமபுரி
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: World Sparrow Day

  அடுத்த செய்தி