• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேருந்தில் குழுவாக வந்து திருடும் பெண்கள் - தருமபுரியில் சிக்கிய பெண்ணிடம் விசாரணை

பேருந்தில் குழுவாக வந்து திருடும் பெண்கள் - தருமபுரியில் சிக்கிய பெண்ணிடம் விசாரணை

தருமபுரி

தருமபுரி

பேருந்தில் ஏறும், இறங்கும் பயணிகளிடம் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடுவது விசாரணையில் தெரியவந்தது.

  • Share this:
    தருமபுரி பேருந்து நிலையத்தில், பேருந்து ஏறும் பயணிகளிடம் பணம், செல்போன் திருடிய பெண் கைது.

    தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் திருப்பத்தூருக்கு பயணம் மேற்கொள்ள வந்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த மணிமேகலை என்ற இளம்பெண் பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது தனது கையில் வைத்திருந்த பேக்கிலிருந்த(ஹேண்ட் பேக்) இருந்த பணம் ரூ.2800 மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையறிந்த தொடர்ந்து  பயணி மணிமேகலை, பேருந்து நிலையத்தில் உள்ள காவல் மையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

    பேருந்து நிலையத்திற்கு வந்த தருமபுரி நகர காவல் துறையினர், பேருந்தில் ஏறிய மற்றும் இறங்கி பயணிகளிடம்  சோதனை செய்து, தீவிர விசாரணை நடத்தினர். அப்பொழுது பெண் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரிடம் சோதனை செய்ததில், திருடு போன செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த பெண் வேலூர் மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த பவுணம்மாள் (55) என்பது தெரியவந்தது. இந்த பெண் மற்றும் சில பெண்கள் சேர்ந்து பேருந்து நிலையங்களில், பேருந்து ஏறும், இறங்கும் பயணிகளிடம் நகை, பணம்
    உள்ளிட்ட பொருட்களை திருடுவது விசாரணையில் தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்த ஒரு சிலர் தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து பவுனம்மாளை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும்  இந்த பெண்ணின் மீது வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதியபட்டுள்ளதா எனவும் இதுபோன்று வேறு யாரிடமாவது பணத்தை கொள்ளயைடித்துள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: