Home /News /tamil-nadu /

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி முதியவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி முதியவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?

Neet counselling

Neet counselling

நான் கவுன்சிலிங்கைத் தவிர்த்துவிட்டால், ஒரு இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்வான் என சிவப்பிரகாசம் கூறினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  நீட் தேர்வில் வெற்றி பெற்ற 61 மூத்த குடிமகனான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், தனது மருத்துவர் ஆகும் கனவை மகனுக்காக கைவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுவாரஸ்யமான அந்த ஆசிரியரின் பின்னணி குறித்து தற்போது அறிந்து கொள்வோம்.

  மாணவர்கள் அனைவருக்குமே ஒரு கட்டத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல என்பதால் இடையியிலேயே பலரும் அந்த லட்சியத்தை கைவிட்டு வேறு துறைகள் நோக்கி நகர்ந்து விடுவார்கள். ஆனால், சிவப்பிரகாசம் தனது இலக்குகளை அவரது ஆசைகளைத் தகர்க்க விடவில்லை. தருமபுரியைச் சேர்ந்த 61 வயதாகும் சிவபிரகாசம், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்ததால், இன்று (ஜனவரி28) கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார். இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் தனது மாணவர் ஒருவருடன் சேர்ந்து சிவப்பிரகாசம் கலந்து கொள்ள இருக்கிறார்.

  சிவப்பிரகாசத்துக்கு மருத்துவ இடம் எளிதாக கிடைக்கும் என தேர்வுக் குழு தலைவரான வசந்தாமணி தெரிவித்தார். அவர் கூறுகையில், “அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 437 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிவப்பிரகாசத்தின் ரேங்க் 349 ஆகும். இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள 719 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வசந்தாமணி கூறினார்.

  Also read:   'கடவுள் என் பிரா சைசை அளவிடுகிறார்' - மீடியா முன் 'பிக் பாஸ்' நடிகை ஆபாச பேச்சு!!

  எனினும், நீட் தேர்வில் 249 மதிப்பெண் எடுத்த சிவப்பிரகாசம், அவரின் மகனை போல மருத்துவம் படிப்பாரா என்பது சந்தேகம் தான். கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வரும் சிவப்பிரகாசத்தின் மகன், தனது தந்தையை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்.

  நான் மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவரானால், என்னால் 10-15 ஆண்டுகள் மட்டுமே மருத்துவராக பணியாற்ற முடியும், இதுவே இளம் மாணவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், அவரால் 40 முதல் 40 ஆண்டுகள் வரை மருத்துவராக பணியாற்ற முடியும். என்னால் ஒரு மாணவரின் வாய்ப்பு பறிபோகும், அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவருக்கு என்னால் வாய்ப்பு பறிபோகக் கூடாது என்பது என் மகனின் கருத்தாக உள்ளது என்றார் சிவப்பிரகாசம்.

  Also read:   பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை, பெண்களே ஊர்வலமாக அழைத்துச் சென்று அடி உதை - டெல்லியில் கொடூரம்... வீடியோ

  இருப்பினும், நான் தருமபுரியில் இருந்து சென்னைக்கு எனது மாணவரை கவுன்சிலிங்கிற்கு அழைத்துச் செல்கிறேன். இன்னமும் எனக்கு இரண்டு மனதாக உள்ளது. ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியராக, ஒரு மாணவரின் வாய்ப்பைப் பறித்ததற்காக நான் குற்ற உணர்வு கொள்ள விரும்பவில்லை எனவும் நான் கவுன்சிலிங்கைத் தவிர்த்துவிட்டால், ஒரு இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்வான் எனவும் சிவப்பிரகாசம் கூறினார்.

  மருத்துவர் ஆக வேண்டும் என சிறுவயதில் லட்சியத்துடன் இருந்த சிவப்பிரகாசம், பியூசி மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால், அவரால் மருத்துவர் ஆக முடியவில்லை. இதற்கும் இரண்டு முறை பியூசி தேர்வு எழுதியிருக்கிறார். பிஎஸ்சி விலங்கியல் படித்துவிட்டு, அரசுப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

  Also read:    பாஜகவின் கோவா ட்விஸ்ட்.. 45 ஆண்டுகால கவுரவத்தை இழக்கிறதா காங்கிரஸ்?

  உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கான உச்சபட்ச வயதை நீக்கி உத்தரவிட்டதால், தனது கனவை மீண்டும் தூசி தட்டிய சிவப்பிரகாசம் கடினமாக படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
  Published by:Arun
  First published:

  Tags: Dharmapuri, Neet, Neet Exam

  அடுத்த செய்தி